எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போபால், ஏப்.5 தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்காக பல்வேறு அமைப்புகள், தாழ்த்தப்பட்ட, பழங் குடியின மக்கள் ஒன்றிணைந்து போராட் டங்களை நடத்தி வரு கிறார்கள். மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் எழுவர் கொல்லப்பட்டுள்னர். ஒருவர் படுகாயமடைந்து உயி ருக்கே போராடும் மோசமான நிலையில் உள்ளார்.

மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராட்டிரம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் காவல் துறை போராட்டங்களை நடத்துவோர்மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. அறவழிப்போராட்டத்தை கலவரமாக மாற்றியது பாஜக அரசுகளின் காவல்துறையின் செயல் ஒரு பக்கம் என்றால், ஆளும் பாஜக, இந்துத்துவ தீவிரவாதிகளும் களத்தில் இறங்கி வன்முறைகளை அரங்கேற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தின்போது கல்வீச்சு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன. கலவரத்தில் பொதுச்சொத்துகள் சூறையாடப்பட்டன. சாலை மறியல்கள், ரயில் மறியல் போராட் டங்கள் நடந்தன. உத்தரப்பிரதேசம், ஒடிசா, பீகார், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்களைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் ராஜா சவுகான் எனும் பாஜக பிரமுகர் போராட்டத்தை திசைதிருப்புவதற்காக மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கியால் மக்களை நோக்கி அவர் சுடுகின்ற காட்சிப்பதிவு சமூக ஊடகங் களில் பரவியது. இந்நிலையில் 3.4.2018 அன்று பாஜக பிரமுகரான ராஜா சவுகான் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

20.3.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் வன்கொடுமைச்சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய் வேண்டி யதில்லை என்று கூறியுள்ளது. மத்திய அரசின் திருத்தச்சட்டம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பெரும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மத்திய அரசு 2.4.2018 அன்று மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner