எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

போபால், ஏப்.6 மத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்துமத சாமியார்கள் அய்வர் அமைச்சர் அந்தஸ்தில் பதவியில் நியமனம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் அம்மா நிலத்தில் சட்டப் பேரவைக்கான தேர் தல் நடைபெற உள்ளது. அதையொட்டி யே இதுபோன்ற செயல்களில் தீவிரம் காட்டி வருகிறது என்று ஆளும் பாஜ கவை எதிர்க்கட்சியான காங்கிரசு கட்சி சாடியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநில அரசின் பொது நிர்வாகத்துறையின் கூடுதல் செயலாளர் கே.கே.காத்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நர்ம தானந்த் மகராஜ், ஹரிஹரானந்த் மக ராஜ், கம்யூட்டர் பாபா, பய்யூ மகராஜ் மற்றும் பண்டிட் யோகேந்திர மகந்த் ஆகிய அய்வருக்கும் அரசின் சார்பில் அமைச்சருக்கு நிகரான பதவி அளிக்கப் படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

நர்மதா ஆறு பாதுகாப்புக் குழுவில் மேற்கண்ட அய்ந்து சாமியார்களும் 31.3.2018 அன்று இடம்பெற்றனர். அக் குழுவின் உறுப்பினர்கள் என்கிற முறை யில் சாமியார்கள் அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்படுவதாக பொதுநிர்வாகத் துறை அலுவலர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் நடை பெற உள்ள தேர்தலை முன்னிறுத்தியே ஆளும் பாஜக அரசு, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனி மரியாதை செய் வதாகக் கூறி, ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காகவே  இதுபோன்று செய்து வருகிறது என்று காங்கிரசு கட்சி சாடியுள்ளது.

காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர் பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது: "இந்த வித்தையெல்லாம் அரசியல் நோக்கத்துடன் கூடியதாகும். முதல மைச்சர்  (சிவராஜ்சிங் சவுகான்) தன்னு டைய பாவங்களை துடைத்துக் கொள் வதற்காகவே. அவர் நர்மதா ஆற்றை பார்வையிடுவதை புறக்கணித்தார். ஆற் றங்கரையோரத்தில் மாநில அரசு நட் டுள்ள ஆறு கோடி மரக்கன்றுகளை  முதலமைச்சர் கூறுவதைப்போல், இந்த சாமியார்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

சாமியார்கள் தொடர்பானவற்றை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை என்று கூறும் பாஜக செய்தித்தொடர்பாளர் ரஜினிஷ் அகர்வால் கூறியதாவது: ஆற்றின் பாதுகாப்புக்காகவும், சுற்றுச் சூழல்  பாதுகாப்புப் பணிகளுக் காகவும்  சாமியார்களுக்கு அமைச்சர் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. பொது மக்களின் பங்க ளிப்புடன் நர்மதா ஆற்றை சாமியார்கள் பாதுகாப்பார்கள் என்றார்.

1000கி.மீ. தொலைவுப்பயணம் செய் வதற்குரிய கார் மற்றும் எரிபொருள் வசதி, வீட்டு வாடகைப்படி ரூ.15 ஆயி ரம், இதர செலவினங்களுக்காக ரூ.3,000 மேலும் தனி உதவியாளர் மற்றும் பணி யாளருக்கான செலவினம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அரசின் சார்பில் சாமியார்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner