எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, ஏப்.8 இந்தி யாவின் முன்னேற்றத்தை தடுக் கும் சக்திகளுக்கு எதிராகப் போராடுவது நாட்டு மக்களின் கடமை என்று முன்னாள் பிரத மர் மன்மோகன் சிங் கூறினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஜெகஜீவன் ராமின் 111-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதுகுறித்து மன்மோகன் சிங் கூறியதாவது:

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சக்திகள் நாட்டின் முன்னேற்றத்தை தடுப்பதுடன், அவற்றை பின்னோக்கி இழுத் துச் செல்கின்றன. அத்தகைய சக்திகளுக்கு எதிராகப் போராடி, அவற்றை முன்னேறவிடாமல் தடுப்பது இந்திய மக்களான நமது கடமையாகும்.

நாம் அனைவரும்  சமூக நீதி யில் நாட்டை வளர்ச்சி அடையச் செய்வதுடன், சமநிலையையும் ஏற்படுத்த வேண்டும். இதுவே, சமூக சீர்திருத்தவாதியான ஜெக ஜீவனுக்கு செய்யும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்று மன்மோகன் சிங் கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய மக்களவை முன்னாள் தலை வரும், ஜெகஜீவன் மகளுமான மீரா குமார் கூறியதாவது: ஒடுக் கப்பட்ட மக்களின் வலியை உணருவதே மிகப்பெரிய பலம் என்று தந்தை எனக்கு கற்றுத் தந்துள்ளார். 'நாட்டில் பல மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கான தேவையை அவர்களால் வெளிப்படுத்த இயலாது. அவர்கள் கூறுவதை மக்களும் கேட்க மாட்டார்கள். அத்தகைய மக்களுடன் பழகி, அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்' என்றும் அவர் அறி வுறுத்தியுள்ளார் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner