எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஏப். 11 எந்த மதத்தை தழுவ வேண்டும்? என்பது குறித்த முடிவை எடுப் பது ஒருவருடைய தனிப் பட்ட உரிமை என்று தெரிவித்துள்ள உச்ச நீதி மன்றம், அதன்படி, ஹாதியாவுக்கும் அவரது நம்பிக்கைகளை வரை யறுத்துக் கொள்வதற்கு பூரண சுதந்திரம் உண்டு எனக் கூறியுள்ளது.

கேரளப் பெண் ஹாதியாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்ட தீர்ப்பின் முழு விவரங்கள் இணையதளத்தில் திங்கள்கிழமை பதிவேற்றப்பட்டது. அதில், தனிமனிதர்களின் மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த பல்வேறு விஷயங்களில் உள்ள உரிமைகள் விளக்கப் பட்டுள்ளன.

கேரளத்தைச் சேர்ந்த ஹாதியா, இஸ்லாமிய இளைஞரான ஷாஃபின் ஜஹானைக் காதலித்து அவர் திருமணம் செய்தார். அதற்காக அப்பெண் முஸ்லிம் மதத்துக்கு மாறினார். இதனிடையே மதம் மாற்றுவதற்காக திட்டமிட்டு இந்தக் காதல் நாடகம் அரங்கேற்றப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அந்தத் திருமணத்தை ரத்து செய்தது. அதை எதிர்த்து ஷாஃபின் ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்தச் சூழலில், ஹாதியா வழக்கின் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு அண்மையில் வெளியிட்டது. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஹாதியாவின் திருமணம் செல்லும் என்று அறிவித்தது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பின் விரிவான அம்சங்கள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மதம் மாறுவதை ஹாதியாவின் தந்தை மிகப் பெரிய வரம்பு மீறல் நடவடிக்கையாகக் கருதியிருக்கலாம். அதன் தொடர்ச்சியாகவே, தனது மகளின் நலன் காக்க வேண்டும் என்ற நோக்கில் அவரது திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், விரும்பிய வாழ்க்கையையும், மார்க்கத்தையும் தேர்ந்தெடுப்பதைத் தடுக்கும் உரிமை சம் பந்தப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்குக் கூட இல்லை.

அதன்படி பார்க்கும்போது ஹாதியாவின் மதமாற்றத் தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அரசியல் சாசனத்தில் தனிமனிதர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை நாம் மறுதலிக்கிறோம் என்றே அர்த்தம்.

தனிநபர்களுக்கு உரிமைகளை வழங்குவது அல்ல தற்போது முக்கியம்; மாறாக அந்த உரிமைகளுக்கு மதிப் பளித்து உளமாற ஏற்றுக்கொள்வதுதான் முக்கியம். அந்த வகையில் இவ்விவகாரத்தை அணுகும்போது, ஹாதியாவுக்கு, தனது திருமணத்தையும், இறை வழிபாட்டையும் தேர்ந் தெடுப்பதற்கான முழு அதிகாரமும், சுதந்திரமும் உள்ளது என்று அந்தத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner