எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப் 17 -சோலார் (சூரிய மின்சக்தி)மின் உற்பத்தியில் முன் னணியில் இருந்த தமிழகம் இன்றைக்கு நாட்டிலேயே அய்ந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  இது தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதில் அக் கறையற்ற  அரசின் செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சோலார் மின் உற்பத்தியில் தமிழகம், உயர்நிலையில் இருந்து 5 வது இடத்திற்குப்பின் தங்கியுள்ளது குறித்து 'சண்டே டைம்ஸ்'  நாளேடு வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை வருமாறு: -சோலார் மின் உற்பத்தித்திறனில் தற்போது, தமிழ்நாடு நாட் டிலேயே அய்ந்தாவதுஇடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 648 மெகா வாட் திறன் கொண்டஅதானி சோலார் மின்திட்டம் தனது உற்பத்தியை துவக்கியநிலையில் 2016 ஆம் ஆண்டில் தமிழகம் சூர்ய மின் சக்தி -சோலார் - மின் உற்பத்தியில் முதல் இடத்தில் இருந்தது.

அதற்குப் பிறகு தமிழகம், தனது முதலிடத்தை தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு விட்டுக் கொடுத்து பின் தங்கி விட்டது.2018 ஆம் ஆண்டு கர்நாடகாமாநிலம் சோலார் மின் உற்பத்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தொடர்ந்து முன்னணியில்இருக்கும் வகையில் இருந்துவருகிறது.  2017 ஆம் ஆண்டு கர்நாடகா 2 ஜி.டபிள்யு திறனில் புதியசோலார் திட்டங்களை உருவாக்கியதோடு, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதே அளவிற்கான திறனுள்ள திட்டங்களைத் தீட்டி அவைகளைச் செயல்படுத்தியுள்ளதாக, மெர்க்காம் கேபிடல் இந்திய நிறுவனஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.கடந்த ஆண்டில் - 2017 - ல்தமிழகத்தின் ஒட்டு மொத்தசோலார் மின்உற்பத்தியானது1720 மெகாவாட் என்கிற அளவிலேயே இருந்தது. அதேசமயம் தெலுங்கானா, தமிழகத்தின் அளவையும் தாண்டி 3 ஆயிரம் மெகாவாட் என்கிற அளவினை எட்டியது. கர்நாடகத்தின் உற்பத்தி 2744மெகா வாட்டாகவும், ஆந்திராவின் உற்பத்தி 1225 மெகா வாட்டாகவும் இருந்துள்ளன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் அதிக பட்சமாக 2 ஆயிரம்மெகாவாட் சோலார் மின் உற்பத்தி செய்யக் கூடிய அளவிற்கு திறன்உள்ளது. ஆனால் அதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் ஆர்வம் காட்டவில்லை. எனவே தான் தமிழகத்தின் சோலார் உற்பத்தி என்பது பின் தங்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய ஆர்வம் குறைந்தநிலைமை  தமிழகத்தில்  இருந்தபோதும் தற்போதுதான் ஒரு சில திட்டங்கள் செயல் படத் தொடங்கியுள்ளன. அவைகள் விரைவில் முடிவ டையும் என்றும் நம்பப்படுகிறது. இவ்வாறு 'சண்டே டைம்ஸ்' செய்திக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நிலையில் இருந்த தமிழகத்தின் சோலார் மின்உற்பத்தி என்பது தற்போதைய நிலையில் 1.8 ஜி.டபுள்யூ என்ற அளவில் தான் இருக்கிறது. அதேசமயம் ஆந்திர மாநிலம் மற்றும் ராஜஸ்தானில் 2.4 என்றும், தெலுங்கானாவில் 3.3 என்றும் கர்நாடகாவில் 5 என்றும் இருக்கிறது.

தமிழக அரசின்அலட்சியத்தால், சோலார் மின் உற்பத் தியில் உயர்ந்த நிலையில் இருந்து கீழிறங்கி அய்ந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner