எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஏப்.22 பாரதீய ஜனதா ஆட்சியில் பெண் களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் பற்றி பிரதமர் மோடி பேசாமல் இருப்பது ஏன்? என்றும் நடிகை குஷ்பு தெரிவித்துள் ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர் பாளரும், நடிகையுமான குஷ்பு பெங்களூருவில் உள்ள காங் கிரஸ் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வரு கிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை களை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது. நாட்டில் நடக்கும் பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசாமல் இருப்பது ஏன்? காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவோம் என்று பாரதீய ஜனதாவினர் கூறி வரு கின்றனர். உண்மையில் பெண்கள் இல் லாத நாட்டை பா.ஜனதாவினர் உருவாக்க நினைக்கிறார்கள்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பார தீய ஜனதா ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, முக்கியத்துவமும் இல்லை. பெண்களுக்கு எதி ரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களே அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நடந் ததைவிட தற்போதைய பார தீய ஜனதா ஆட்சியில், பாலி யல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை முயற்சி சம் பவங்கள் அதிகரித்து விட்டது. நடைபெற உள்ள கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 3 தொகு திகளில் போட்டியிட வேட்பா ளர்கள் அறிவிக்கப்பட்டு உள் ளனர். அவர்கள் வெற்றி பெற சாத்தியமில்லை. தமிழக மக் கள் சந்திக்கும் பிரச்சினைகளை அ.தி.மு.க. கட்சி தலைவர் களால் தீர்க்க முடியவில்லை. அப்படி இருக்கும் போது கர்நா டகத்தில் வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து அடுத்த மாதம் (மே) 3-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத் தரவு பிறப்பிக்க இருப்பதால், அதுபற்றி நான் பேச விரும்ப வில்லை.

இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner