எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி அரசின் பொய்யான வாக்குறுதிகள்

சித்தராமையா கடும் தாக்கு

பெங்களூரு, ஏப்.30 கரு நாடக சட்டசபைக்கு வருகிற 12-ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் நெருங்குவதால் கரு நாடகத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் கரு நாடகத்தில் முற்றுகையிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றச் சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் சித்தராமையா பிரத மர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பட்டியலிட்டு உள்ளார்.

இந்தத் தேர்தலிலும் நரேந் திர மோடி அரசின் பொய்யான வாக்குறுதிகள் என்ற தலைப் பில் அவர் குற்றச்சாட்டுகளை பதிவிட்டு உள்ளார். வரிசை எண் குறிப்பிட்டு அவர் வெளி யிட்டு உள்ள குற்றச்சாட்டுகள் விவரம் வருமாறு:-

1. கருப்பு பணம் வெள்ளை யாக மாறவில்லை.

2. மக்கள் தங்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சத்தை பெறவில்லை.

3. உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் வைத் திருந்த ரூபாய்க்கு மதிப்பில்லா மல் போய்விட்டது. மக்கள் ஏ.டி.எம். மய்யங்களிலும், வங் கிகளிலும் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர்.

4. வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. வேலையில்லா பட்டதாரிகள் பக்கோடா விற்கும்படி அறிவு றுத்தப்பட்டனர்.

5. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.

6. ஊழலற்ற அரசு அமைப் போம் என்று உத்தரவாதம் அளித்தார்கள். ஆனால் வங்கி கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு முதல் அமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு களை பட்டியலிட்டார்.

மேலும் மோடி அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறை வேற்றவில்லை என்றும், மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜனதா, சந்தர்ப்பவாத ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை தோற்கடிப்பதற்காகவே இந்த தேர்தலில் காங்கிரசு போராடு கிறது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner