எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கராச்சி, ஏப். 30- படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த 12 இந்திய மீனவர்களுக்கு தாங்கள் உதவி யதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இதுதொடர் பாக பாகிஸ்தான் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது: எஸ்டி மார்ஸ் என்ற பட கில் உணவு, தண்ணீர் இல்லா மல் 8 நாள்களாக தவித்த அந்த மீனவர்களுக்கு, பாகிஸ்தான் கடற்படையினர் உதவினர். அவர்களை மீட்பதற்கு இந்திய படகுகள் எதுவும் வராத நிலையில், பாகிஸ்தான் கடற் படையின் பிஎன்எஸ் ஆலம்கீர் கப்பல் உதவியது. மீனவர்க ளுக்கு உணவும், மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டன. மனிதாபிமான அடிப்படையில் இந்த உதவிகள் அளிக்கப்பட் டன. மேலும், அந்த படகை சரி செய்வதிலும் பாகிஸ்தான் கடற்படை உதவியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது. எனினும், எந்த கடல் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது என்ற விவரம் தெரி விக்கப்படவில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner