எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய அரசியல் சட்டம் இந்தியக் குடிமக்களுக்குப் பல உரிமைகளை வழங்கி உள்ளது. அதே நேரத்தில் குடிமக்களிட மிருந்து சில புனிதமான கடமைகளையும் எதிர்ப்பார்கிறது. உரிமையும் கடமையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை.

1976இல் 42ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் இக்கடமைகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

குடிமக்களின் அடிப்படைக் கடமைகள் வருமாறு:

1) அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடத்தல், அதன் குறிக்கோள்களையும், அதன் பல்வேறு அமைப்புகளையும், தேசியக் கொடியையும், நாட்டுப் பண் ணையும் மதித்து நடத்தல்.

2) இந்தியாவின் விடுதலைப் போராட் டத்திற்கு வித்திட்ட உன்னதமான குறிக் கோள்களைப் போற்றி நடத்தல்.

3) இந்தியாவின் இறையாண்மையையும், ஒற்றுமையையும், முழுமையையும் கடைப்பிடித்துக் காத்தல்.

4) நாட்டைப் பாதுகாத்தல், தேவைப் படின் அப்பணிகளில் ஈடுபடுதல்.

5) சமயம், மொழி, இனம், நிலப்பகுதிகள் கடந்த ஒற்றுமையுடன் இந்திய மக்கள் அனைவரிடமும், உடன் பிறப்புணர்வைப் பேணி வளர்த்தல், மகளிரின் மாண்பு குன்றாமல் பாதுகாத்தல்.

6) நமது நாட்டின் பண்பாட்டுச் செழுமை, மரபு வளமை இவற்றை மதித்து போற்றுதல்

7) ஏரிகள், ஆறுகள், காடுகள், காட்டு விலங்குகள் அடங்கிய சுற்றுச்சூழல் முதலியவற்றைக் காத்தல், மேம்படுத்துதல், உயிர்களிடையே பரிவு காட்டுதல்.

8) அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆராய்ச்சி மற்றும் சீர்திருத்த மனப் பாங்கினை வளர்த்தல்.

9) பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல், வன்முறையை அறவே தவிர்த்தல்.

10) நாடு தொடர்ந்து உயர்ந்த நிலையில் முயன்று வெற்றிகளைக் குவிக்கும் வகை யில் தனி மனித மற்றும் கூட்டுச் செயல் பாடுகளில் அனைத்து துறைகளிலும் உன்னதத்தை அடையப் பாடுபடுதல்.

மேற்கண்ட புனிதமான கடமைகளை இந்தியக் குடிமகன் ஒவ்வொருவனும் நிறைவேற்றி வருவானேயானால் இந்திய வலிமைமிக்க மக்களாட்சியாக விளங்கி உலக நாடுகளில் முன்னணி நாடாகத் திகழும் என்பதில் அய்யமில்லை.

- செய்யாறு இர.செங்கல்வராயன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner