எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டேராடூன், மே 7 உத்தர கண்டில் கடந்த 10 ஆண்டுகளில் 700 கிராமங்களுக்கும் மேல் வறண்டுவிட்டன என்றும் மொத்தம் 3.83 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் கிரா மங்களிலிருந்து இடம் பெயர்ந்து விட்டனர் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அந்த மாநில ஊரக குடிய மர்வு மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.நேகி கூறியதாவது: ஆய்வறிக்கையின்படி, 70 சதவீத மக்கள் மாநிலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம் பெயர்ந்துள் ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 3,83,726 பேர் தங்கள் கிராமங் களிலிருந்து இடம்பெயர்ந்து விட்டனர். அவர்களில் 50 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்காக இடம் பெயர்ந்தனர். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி, 734 கிராமங்களில் மக்கள் யாரும் இல்லை. இதே காலகட்டத்தில் 565 கிரா மங்களில் 50 சதவீத மக்கள் இடம் பெயர்ந்துவிட்டனர் என்று நேகி தெரிவித்தார்.

இந்த ஆய்வறிக்கையை அந்த மாநில முதல்வர் திரி வேந்திர சிங் ராவத் தனது இல்லத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "இந்த ஆய்வில் கிடைக்கப் பெறும் தகவல்கள் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்" என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner