எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 13- -12.5.2018 அன்று கர்நாடக சட்டப்பேர வைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 70சதவிகித வாக்குகள் பதிவாகி யுள்ளன. கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில், ஜெய் நகர் தொகுதி பாஜக வேட்பாளர் இறந்ததால் அந்த தொகுதிக் கும், பாஜக-வினரால் வாக்காளர் அட்டை பதுக்கல் நடந்த ராஜ ராஜேஸ்வரி தொகுதிக்கும் தேர் தல் நடைபெறவில்லை. ஏனைய 222 தொகுதிகளுக்கும் 12.5.2018 அன்று வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில், வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 4 கோடியே 96 லட்சம் பேருக்காக மாநிலம் முழுவதும் 56 ஆயிரத்து 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் மாலை 6 மணி வரை சுமார் 70 சதவிகித வாக்கு கள் பதிவாகின.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner