எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மதிப்பெண்கள் விவகாரத்திலும், கட்டண விவகாரத்திலும் உயர்ஜாதி மற்றும் பணக்காரர் களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் சான்று களுடன் பட்டியலிட்டுள்ளது.

இயற்பியலில் 5 விழுக்காடு, வேதியியலில் 10 விழுக்காடு, உயிரியலில் 20 விழுக்காடு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக எடுக்கப் படும். நீட் தேர்வு குறித்த மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு குறித்து மேலே குறிப்பிட்ட மதிப்பெண் விபரங்களைக் கொண்டே கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் அடிப் படையில் குறைவான மதிப்பெண் எடுத்த பணக்காரர்களில் பிள்ளைகள் எளிதில் மருத்துவக் கல்லூரியில் சேரவும், தகுதியான ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தின் பிள்ளை களுக்கு மருத்துவக் கல்வி என்பது கனவாகவே இருந்துவிடும்.  நீட் தேர்விற்கு முன்பாக பொது இடங் களுக்கு 50 விழுக்காடும் இட ஒதுக்கீட்டிற்குள் வருபவர்களுக்கு 50 விழுக்காடும் கட் ஆப் மார்க்குகளாக பார்க்கப்பட்டது.  இதனால் முன்பு 50 விழுக்காடு கட்ஆப் மார்க் இருந்த போது பொதுப்பிரிவினர், 720 மதிப்பெண்ணுக்கு  360 மதிப்பெண் எடுத்தால் மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஆனால் நீட் தேர்விற்குப் பிறகு பொதுப்பிரிவினர் கட் ஆப் குறைக்கப் பட்டதால் அவர்கள் 720க்கு 145மதிப்பெண் எடுத்தாலே பொதுப்பிரிவினரில் 20 விழுக் காட்டினர் எளிதில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுவிடுவார்கள்.  இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு 40 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்கவேண்டும், அதாவது 740க்கு 118 கட் ஆப் என்ற விகிதத்தில் உள்ளது. 2017ஆம் ஆண்டு பொதுப்பிரி வினருக்கு 131 மதிப்பெண் என்று முடிவானது. அதே நேரத்தில் நீட் தேர்விற்குப் பிறகு இடஒதுக்கீட்டில் வருபவர்களுக்கு 107 ஆக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்காக (2018) நீட் தேர்வுகள் அதன் முடிவுகள் மேலே குறிப்பிட்ட புதிய விகிதப்படிதான் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கும் வகையில் முடிவு செய்யப்பட் டுள்ளது. இதன்படி பொதுப்பிரிவில் 20 விழுக்காடு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுக்கப்படு வார்கள்.

பொதுப்பிரிவு மாணவர்கள் அவர்களுக் கான முன்பு இருந்த 50 விழுக்காடு மதிப்பெண்கள் எடுக்காத நிலையிலும் 20 விழுக்காடு எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் இடம் கிடைத்துவிடும், அதாவது பாதிக்கும் குறைவான மதிப் பெண்களே அவர்கள் எடுத்தால் போதுமானதாகிவிடும்.

இந்த முறைப்படி குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மருத்துவக்கல்லூரியில் அனுமதி பெற்றுவிடுகிறார்கள். இது குறித்த டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய ஆய்வு களில் 2016ஆம் ஆண்டு பொதுப்பிரிவில் வருபவர்களில் 148 மதிப்பெண்கள் பெற்ற பலர் உத்தரப்பிரதேசத்தின் தனியார் கல்லூரிகளில் இடம் பெற்றுவிட்டனர். மேலும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 25 விழுக்காடு மாணவர்கள் அதாவது 100க்கு 30 மாணவர்கள் நீட் மூலம் மருத்துவக்கல்லூரியில் இடம் பிடித்துள்ளனர். பாண்டிச்சேரி மருத்துவக் கல்லூரியில் 21 விழுக்காடு மதிப்பெண் பெற்ற 14 வட இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் ஒன்றிரண்டு மாணவர்கள் மட்டுமே இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவர்கள் - மற்ற அனைவருமே பொதுப்பிரிவினர்.  சில பிரபலமான மருத்துவக்கல்லூரிகள் தங்கள் கல்லூரியில் 40 விழுக்காடு மதிப் பெண் பெற்ற மாணவர்களை சேர்த்துக் கொண்டுள்ளனர். கண் துடைப்பிற்காக 30 விழுக்காடு மதிப்பெண் பெற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் ஒன்றிரண்டு   மாணவர்களையும் சேர்த்துள்ளனர். மேலே கூறிய மதிப்பெண் விகிதாச்சாரம் பணக்காரர்கள் மட்டுமே மருத்துவம் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. அதாவது நீட் மூலம் குறைந்த மதிப்பெண் பெற்று சேர்பவர்கள் அதிக பணம் கொடுத்து நல்ல கல்லூரிகளில் இடம் பிடித்து விடுகிறார்கள். மருத்துவக் கல்லூரிகளில் சேர 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கின்றனர். 60,000 இடங்கள் மட்டுமே உள்ள இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பணக்காரவீட்டுப்பிள்ளைகள் 20 விழுக்காடு மதிப்பெண்களைப் பெற்று எளிதாக பணம் கொடுத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடுகின்றனர். அதே நேரத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினர் அதிகமான மருத்துவக் கல்லூரி படிப்புக்கட்டணம் காரணமாக மருத்துவப்படிப்பில் இருந்து ஒதுங்கிவிடு கின்றனர். அப்படி அவர்கள் செல்லாத இடங்களையும் பொதுப்பிரிவினரைக் கொண்டு நிறைத்துவிடுகின்றனர்.    புதிய மதிப்பெண் நடைமுறை குறித்து பஞ்சாப் பாபா பரீத் மருத்துவப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜ்பகதூர் கூறிய தாவது: மாநில அளவில் 12 ஆம் வகுப்பு அல்லது தனிப்பட்ட முறையில் வைக்கும் நுழைவுத்தேர்வுகளில் தகுதியான மதிப் பெண்களைப் பெற்று அரசுக் கட்டணத்தில் அல்லது மெரிட்டில் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்துவிடுகின்றனர். ஆனால் நீட் வந்த பிறகு ஏழைகளுக்கு முக்கியமாக திறமை யான அதிக மதிப்பெண் பெற்ற ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமலேயே போய்விடுகிறது. பணக்காரர்களுக்கு ஏழை மாணவர்களுக் கான மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் தாரைவார்க்கப்படுகிறது என்று கூறுகிறார்.

இது குறித்து தமிழ் நாட்டைச்சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே.காமராஜ் கூறும் போது நீட் தேர்விற்கு முன்பு அனைத்துப் பிரிவு மாணவர்களும் தகுதியிருந்தால் மருத்துவம் படிக்க சேரலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் நீட் வந்த பிறகு தகுதி இருக்கும்  ஏழை நடுத்தர மக்கள் மருத்துவம் படிக்க இயலாமல் போய்விட்டது. அதே நேரத்தில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பணத்தைக் கொடுத்து மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்து படிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner