எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை அரசு வங்கிகளில் வைக்கப்பட வேண்டும்.

இந்நிலையில், ஏற்கெனவே போடப்பட்டு சமீபத்தில் முதிர்வடைந்த ரூ.4,000 கோடியில், ரூ.3,000 கோடி மட்டுமே அரசு வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1,000 கோடியை நிபந்தனைகளுக்கு மாறாக ஒரு தனியார் வங்கியில் செலுத்தப்பட்டதாக ராயலசீமா போராட்ட சமிதியின் தலைவர் நவீன் குமார் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, அய்தராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நவீன் குமார் ரெட்டி பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், நிபந்தனைப்படி உண்டியல் பணத்தை அரசு வங்கிகளில் செலுத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு திருப்பதி அறங்காவலர் தலைமை நிர்வாக அதிகாரி, மாநில இந்து அறநிலையத்துறை சிறப்பு செயலாளர், ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிக்கு விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner