எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குதிரை பேரம் நடத்த முயற்சி:

பெங்களூரூ, மே 16 எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரிடமும் விலை போகமாட்டாரகள் என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி முதல்வர் வேட்பாளர் குமாரசாமிகூறினார். கருநாடகா தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து தொங்கு சட்டசபை அமைந்தது. 104 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. வின் எடியூரப்பா ஆளு நரை முதல் ஆளாக சென்று சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநரும் 7 நாள் அவகாசம் அளித்தார். இந்நிலையில் இந்த 7 நாட்களில் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க. முயற்சிப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக குமாரசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. குதிரை பேரம் நடத்த  முயற்சிக் கிறது. அது ஒரு போதும்நடக்காது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலை போகமாட்டார்கள் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner