எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்த ஆண்டு நீட் தமிழ் வழி வினாத்தாளில் ஒரு கேள்வி cheetah என்பதற்கு இணையான தமிழ் சொல்லாக சீத்தா என்று கொடுக்கப் பட்டுள்ளது.

Heart of cheetah - சீத்தாவின் இதயம்

Brain of cheetah - சீத்தாவின் மூளை

இப்படி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் தவறுகள் இருப்பது குறிப்பிடத் தக்கது. மிகக் கேவலமான முறையில் கேள்வித்தாளை தயார்செய்து, அதில் தேர்வானவர்கள் தான் தகுதியானவர்கள் என பொய்களுக்கு மேல் பொய்களை சொல்லி ஏமாற்றி வருகிறது. மாணவர்களின் பல ஆண்டு கால கனவை பொய்க்கச் செய்யும் ஏமாற்று வேலை தான் நீட். இதற்கும் சொம்பு தூக்கிக் கொண்டு வருபவர்களை என்ன சொல்வதென தெரியவில்லை.  ஊடக தோழர்கள், வழக்குரைஞர்கள் ஏதேனும் செய்ய இயலுமா என பாருங்கள்.

- முகநூலிலிருந்து

இந்துத்துவா கூட்டத்துக்கு எப்போதும் ராமன், சீதை என்பதுதான் சிந்தனையாக இருக்கிறது. ராமாயணம் என்பதே வருணாசிரம, மனு தர்ம, ஜாதி அடுக்குமுறையைப் பாதுகாப்பதுதானே, அதுதானே நீட் தேர்வும். ஆகவேதான் சிறுத்தை என்பதற்குப் பதிலாக சீத்தா என்று போட்டுள்ளனர். இதில் மோசடி என்னவென்றால், இதுபோன்ற குழப்படியான கேள்விகளுக்கு மாணவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்?

நீட் தேர்வுக்கான எந்தப் பயிற்சி மய்யத்தில் இதுபோன்ற வினாவுக்கு பதில் அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கப்படும்?

மாணவர்களை மானபங்கப்படுத்துவது, அவமானப்படுத்துவது, தெளிந்த சிந்தனைகளை சிதறடிப்பது இதுபோன்ற உளவியல் தாக்குதல்களுக்கிடையே தேர்வெழுதும் மாணவர்களுக்கு இதுபோன்ற வினாத்தாள்கள்.

மொத்தத்தில் மோசடிகளின் மொத்த உருதான், இந்த கட்டாயமாக்கித் திணிக்கப்படுகின்ற நீட் தேர்வு.

- ந.க.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner