எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

அகமதாபாத், மே 22 குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற் சாலையில், தாழ்த் தப்பட்ட தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ் கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற் சாலையில் பணி யாற்றி வந்தார்.ஞாயிற்றுக்கிழமை தொழிற் சாலைக்கு வந்த அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து, கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

5 பேர் தங்களின் பேண்ட் பெல்ட்டை கழற்றி சரமாரியாக அடித்துள்ளனர்.வானியாவின் மனைவி உள்பட இரண்டு பெண் கள், தாக்குதலை தடுத்தபோதும் விடாமல் அந்த 5 பேரும் தாக்கியுள்ளனர். வானியா மீதான தாக்குதலை தடுத்தபோது, பெண் களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள், காவல்துறையினரை அழைத்துக் கொண்டு வந்து, வெறிக்கும்பலிடமிருந்து வானியாவை மீட்டுள்ளனர். எனினும், ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வானியா உயிரிழந்துள்ளார்.தற்போது, வானியா கொல்லப் பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், 2 பேரைக் கைது செய்துள் ளனர்.

மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே வானி யாவின் உடலை பெறுவோம் என்று உறவினர்கள் தெரிவித்த தால், இது ராஜ்கோட் மாவட்டத் தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. மேலும் தலித் தொழிலாளி முகேஷ் வானியா ஆலை முத லாளியால் அடித்துக் கொல்லப் பட்ட வீடியோ காட்சிப் பதிவு சமூகவலைத் தளங்களில் பரவி யதைத் தொடர்ந்து, இந்த சம்பவத் திற்கு கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன.

இளம் தலித் தலைவரான ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ-வும் கண்டனம் தெரிவித்துள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்தமுகேஷ் வானியாவும், அவரது மனைவி யும் தொழிற்சாலை உரிமையா ளர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பதாகவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்என்றும் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.இதனிடையே, தொழிற்சாலை யில் திருட முயன்றதாலேயே முகேஷ் வானியாவைஅடித்துக் கொன்றதாக சிலர்வதந்தியை கிளப்பிவிடத்துவங்கியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner