எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் அவலம்

அகமதாபாத், மே 23 -இந்தியாவின் முன்மாதிரி மாநிலம் என்றால், அது குஜராத் மாநிலம்தான் என்று ஊடகங்கள் மூலம் பாஜக-வினர் ஒரு பிம்பத்தை கட்ட மைத்தனர். வறுமைஇல்லை; வேலையில்லாத் திண் டாட்டம் என்றால் என்ன வென்றே குஜராத்தில் இருப் பவர்களுக்குத் தெரியாது; அங்கு பாலாறும் தேனாறும் ஓடுவதாக கதைகளைக் கட்டி விட்டார்கள். குஜராத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேர டியாக சென்று வந்தவர்களோ, அங்கு அப்படி ஒரு பிர மாதமும் இல்லைஎன்பதை அனுபவத்தில் கண்டனர். குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற தென்மாநி லங்களின் வளர்ச்சியோடு கூட, குஜராத் நெருங்க முடியாது என்று பொருளாதார அறிஞர்கள் பலர் தெரிவித்தனர்.

பாஜக-வினர் அதையெல் லாம். ஏற்கவில்லை. பொய் களையே தொடர்ந்து பேசி னர். இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புக்களை உரு வாக்கிய மாநிலம் குஜராத் -தான் என்று மத்திய அரசே தெரிவித்தது. நாட்டிலேயே குஜராத் மாநிலத்தில்தான் வேலைவாய்ப்பின்மை சதவி கிதம் மிகக்குறைந்த அளவில், அதாவது 0.9 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதாக மத்திய அரசால்நிர்வகிக்கப்படும் தேசிய வேலைவாய்ப்பு தகவல் மய்யம் தெரிவித்தது. இந்த இடத்தில் எதிர்க் கட்சிகள் விடவில்லை. குஜ ராத்தில் 4 லட்சத்து 95 ஆயிரம் பேர் வேலை கேட்டு பதிவு செய்துள்ளநிலையில், அந்த மாநில பாஜக அரசுகடந்த இரண்டு ஆண்டுகளில் 12 ஆயிரத்து 689 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பை அளித்துள்ளதாக புள்ளி விவரங்களை வெளியிட்டு குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், குஜராத் நீதிமன்றங்களில் ஓட்டுநர் பணிக்கான ஆட்தேர்வு, பாஜ கவினரின் முகமூடிகளைக் கிழித்து,குஜராத்தின் உண்மை முகத்தை மீண்டும் அம் பலப்படுத்தி இருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றம், அதன் அதிகாரத்துக்கு உட் பட்ட பல்வேறு நீதிமன்றங் களுக்கு தேவையான 24 ஓட்டுநர் பணியிடங்களை அண்மையில் அறிவித்து இருந்தது. இப்பணிக்கு ஓட்டு நர் பயிற்சியுடன் பன்னி ரண்டாம் வகுப்புதேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. பணியிடங்கள் வெறும் 24-தான். ஆனால், அதற்கு விண்ணப்பித் தவர்களோ 10 ஆயிரத்து 300 பேர். அதேபோல கல்வித் தகுதி 12-ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால், விண் ணப்பித்தவர்களில் 55 சதவி கிதம் பேர் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள். அதிலும் சாதாரண பாடப்பிரிவுகளைப் படித்தவர்கள் அல்ல.

எம்.எஸ்சி., எம்.பி.ஏ., எம்.டெக், எல்.எல்.பி. மற்றும் இன்ஜினீயரிங் பட்டதாரிகள்.488 பேர் எம்.ஏ. படித்தவர்கள். 101 பேர் எம்.காம். படித்தவர்கள். எம்.எஸ்சி.படித்தவர்கள் 20 பேர். எல்.எல்.பி. என்ற சட்டப்படிப்பை முடித்தவர்கள் 34 பேர். எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ. படித்தவர்கள் மட்டும் 94 பேர்.இவர்கள் தவிர, பி.ஏ. பட்டதாரிகள் 2 ஆயிரத்து 900 பேரும், பி.காம். படித்தவர்கள் 802 பேரும், பி.எஸ்சி., படித்த வர்கள் 92 பேரும், டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்தவர்கள் 366 பேரும் விண்ணப்பித் துள்ளனர். பி.இ., பி.டெக்., பி.சி.ஏ. பட்டதாரிகளும் பட் டியலில் இருக்கின்றனர். உயர் நீதிமன்ற வரலாற்றி லேயே இல்லாத வகையில் முதன்முறையாக 7 பெண் களும் ஓட்டுநர் பணிக்கு  விண்ணப்பித்துள்ளனர். குஜ ராத்தில் எந்த அளவிற்கு வேலையில்லாத் திண்டாட் டம் இருந்தால், எம்.பி.ஏ., எம்.டெக். படித்தவர்கள்  கூட, இப்படி ஓட்டுநர் வேலைக்கு போட்டி போடு வார்கள்?  என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. மேலும், பாஜகவின் மோசடிப் பிரச்சா ரங்களையும் இந்த செய்தி அடித்து நொறுக்கியுள்ளது.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner