எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, மே 23- அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வில் புதிய நடைமுறையை ஏற்க முடியாது என்று புதுவை முதல்வர் வே. நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர் களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: குடி மைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்களின் மதிப்பெண் கள், தர நிலை, நேர்காணல் அடிப்படையில் அவர்களுக்கு அய்ஏஸ், அய்பிஎஸ், அய்எப் எஸ் பணியிடங்களை ஒதுக்கும் வழக்கம் தற்போது நடைமுறை யில் உள்ளது. இதற்குப் பதி லாக குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்கள், அவர்க ளது பயிற்சிக் காலத்தில் சிறப் பாக செயல்படுவதன் அடிப் படையில் அவர்களுக்கு அய் ஏஎஸ், அய்பிஎஸ், அய்எப்எஸ் பணியிடங்களை ஒதுக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளது. இதுதொடர்பாக மாநிலங்களின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறை ஏற்புடையதல்ல. இந்தத் தேர்வை எழுதுகிற வர்கள் திறன் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். தற்போது உள்ள முறையில் எந்தக் குறை யும் கிடையாது. திறமை வாய்ந் தவர்கள் தேர்தெடுக்கப்பட்ட பிறகு, பயிற்சிக் காலத்தில் அவர்களது திறமையைப் பார்க்க வேண்டியது தேவையில்லாதது. இதுகுறித்து பிரத மர், அய்ஏஸ், அய்பிஎஸ் அதி காரிகள் பணித் துறை அமைச் சர் ஜிதேந்தர் சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அய் ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வு பெற் றவர்களின் பயிற்சிக் கால மதிப்பீட்டை கணக்கிட்டு, அதை பணி ஒதுக்கீட்டுக்கு பயன் படுத்துவது ஏற்புடையதல்ல.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner