எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிரகாஷ் அம்பேத்கர் பேட்டி

மும்பை, மே 23-- பாஜக ஆட்சி மத்தியில் நீடிப்பது, ஜனநாய கத்திற்கு நல்லதல்ல என்று டாக்டர் அம்பேத்கரின் பேர னும், பரிபா பகுஜன் மகாசங் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கூறி யுள்ளார்.

மகாராஷ்ட்டிர மாநிலம் பந்தர்பூரில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ் அம்பேத்கர் செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரசு, தேசியவாத காங்கிரசு என பல கட்சிகளும் தடுத்து வருகின்றன. இடஒதுக் கீடு உள்ளிட்ட பல்வேறு விஷ யங்களில் அவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதில், அரசியலமைப்பு சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக மாற்றிய மைக்க பாஜக முயல்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. ஆட்சியைக் கைப்பற்ற எந்த நிலைப்பாடு வேண்டுமானா லும் பாஜக எடுக்கும். இதற்கு மேலும் பாஜக ஆட்சியில் நீடித்தால்அது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் தரப் பில் இருந்து மோடியை எதிர் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சரியான தலைவர் வேண் டும் என்று பேட்டியளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner