எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 25 யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் பணிநியமனம் செய்வ தற்கு தேர்வு செய்யும் முறையை மாற்றுவது என்பது அரசமைப்புக்கு எதிரானது என்று மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். மற்றும் மத்திய பணிகளுக்கான நியமனங்களில், யுபிஎஸ்சி நடத்துகின்ற சிவில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை (ரேங்க்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மத்திய பணியாளர்கள் பயிற்சி அகாடமிக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்திலிருந்து அந்த நடைமுறையை மாற்றி, அண்மையில் பரிந்துரைத்துள்ளது. பரிந்துரையின்படி, லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப் படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பவுண்டேஷன் கோர்ஸ் என்று அறிமுகப்படுத்தி, யுபிஎஸ்சி தேர்வு களில் தேர்ச்சி பெற்றபின்னர் பணிநியமனம் செய்யும் முறையை மாற்றிட திட்டமிட்டு வருகிறது. அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். சிவில் சர்வீஸ் தேர்வுகளில்  தேர்ச்சி பெறுவோருக்கு பணி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பாக பவுண்டேஷன் கோர்ஸ் எனும் 15 வார கட்டாய பயிற்சியை அறிமுகப்படுத்த பாஜக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுபோன்று மாற்றங்கள் செய்வது அரசமைப்புக்கு எதிரானது. அரச மைப்புப்பிரிவு 320அய் மீறுவதாகும்.

யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படும்போது பவுண்டேஷன் கோர்ஸ் என்பதை யுபிஎஸ்சி தன்னிச்சையாக  செய்கிறது. அரசின் நிர்வாக அதிகாரிகளால் பவுண் டேஷன் கோர்சில் மதிப்பெண்கள் வழங் கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 320ஆவது பிரிவைத் திருத்தம் செய்யாமல் இதுபோன்ற மாற்றங்களை செய்கிறார்கள் என்று நான் அய்யப்படுகிறேன். இது போன்ற பரிந்துரைக்கப்பட்டுள்ள மாற்றத் தால் பணிநியமனத்தில் வெளிப்படையான உண் மைத் தன்மை தெரியாமல் போகும்.

இந்த மாற்றத்தால், அரசு அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பத்துக்கேற்ப தேர்ச்சி பெற்ற வர்களின் பணிநியமனங்கள் செய்வதாக ஆகிவிடும். இந்நிலை விரும்பத்தக்கதல்ல. தற்போது ஏற்பட்டுள்ள சூழல் தெளிவாகவே மிகவும் ஆபத் தானதாக உள்ளதை உணர்த்துகிறது. மத்திய அரசு அடுத்தடுத்து தொல்லைகளை அளிக்கவே திட்டமிடு கிறதா? ஆம் என்றால் எதற்காக? பவுண்டேஷன் கோர்ஸ் எனும் திட்டத்தை நடத்தப்போவது யார்? அதற்குரிய தேர்வுக்கான கேள்வித்தாள்களை தயாரிக்கப்போவது யார்? பவுண் டேஷன் கோர்ஸ் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தப்போவது யார்? அரசால் அதிகாரிகளாலேயே  நியமனங்கள் நடை பெறும் என்றால், அரசு அதிகாரிகளுக்கு பதில் அளிப்பதுதான் பவுண்டேஷன் கோர்ஸ் முறையா? இதில் யுபிஎஸ்சி பங்கு என்பது அறவே கிடையாது என்பதுதான் என்று மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இணையப்பக்கத்தில் (பிளாக்) குறிப் பிட்டுள்ளார்.

கடந்த 22.5.2018 அன்று காங்கிரசு தலைவர் ராகுல்காந்தி அரசின் இந்த முடிவு குறித்து, பிரதமரின் திட்டம்குறித்து கூறும்போது, மத்திய அரசுப்பணிகளில் நியமனம் செய்கையில் தரவரிசையைக் கொள்ளாமல், ஆர்.எஸ்.எஸ்-. அமைப்பினரின் விருப்பத்துக்கேற்ப தரவரிசையை மாற்றி  நியமனங்கள் செய்யப்படும் ஆபத்து உள்ள தாக சாடினார் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner