எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்றவாரத் தொடர்ச்சி....

"இந்தியாவில் அனைத்து மதத்தின ரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர் பாபர் மசூதியை இடிக்கும் வரை."

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பழமை வாய்ந்த பாபர் மசூதியை இங்குள்ள இந்துமத வெறியர்கள் ஒரு நாள் குறித்து இந்தியா முழுவதி லிருந்தும் இந்துமத வெறியர்கள் ஒன்றுகூடி கடப்பாறை போன்ற ஆயுதங்களை கொண்டு இடித்தனர்.

பாபர் மசூதியை பாதுகாப்போம் என்று நீதிமன்றத்தில் உறுதிமொழி கொடுத்துவிட்டு அன்றைய மாநில அரசு வேடிக்கை பார்த்தது. அன்றைய பாரத பிரதமராக இருந்த திரு. நரசிம்ம ராவ் மத்திய அரசு ஆட்சியில் ராணுவம் சற்று தூரத்தில் மசூதி இடிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தது,

வட (இந்தியா) நாட்டில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் ஆயிரக் கணக்கான முசுலீம் மக்கள் எரிந்து சாம்பலாயினர். இந்த சம்பவங்களால் மக்களின் ஒற்றுமை கேள்விக் குறியாயிற்று.

இப்போது உணருங்கள் - இந்து - இந்தி - இந்தியா! தேவையா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்று கூறுகிறது, ஆனால் காவேரி நதிநீர் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசு மறுக்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகம விதிகளின்படி இது தவறு என்று ஒரு பிரிவினர் மேல் முறையீடு செய்கின்றனர்.

முசுலீம் மக்களின் மத அடிப்படையில் முத்தலாக் என்ற விவாகரத்து முறை கூடாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. எல்லாப் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அய்யப்பன் கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதை ஆகம விதிகளைக் காட்டி மறுக்கிறது. ஆகம விதிகள் என்றால் எல்லா மதத்தினருக்கும் பொதுதானே!

தொழிலதிபர் விஜய் மல்லையா ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரிப் பாக்கி வைத்துவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி ஓடுகிறார். இதை மத்தியில் உள்ள ஆட்சி வேடிக்கை பார்க்கிறது. ஆனால் ஒரு ஏழை விவசாயி, விவசாயம் செய்வதற்கு டிராக்டர் வாங்கி வங்கியில் பெற்ற கடனை செலுத்தவில்லை என்று கூறி ஜப்தி செய்கிறது.

பெரிய தொழிலதிபர்கள் வங்கியில் பெற்ற கோடிக்கணக்கான பணத்தை திரும்ப செலுத்தவில்லை. வங்கிகளின் மூலம் கொடுக்கப்பட்ட பல லட்சக் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாராக்கடன் என்று பெரும் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்கிறது.

மருத்துவர்
ந.ஆறுமுகம்

"இப்போது ஒரு புதிய சட்டம் விரைவில் வரப்போகிறது. அதாவது, திவாலாகும் சூழ்நிலையிலுள்ள அரசுத்துறை வங்கிகளைக் காப்பாற்ற, பொதுமக்கள் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் நிரந்தர சேமிப்பு வைப்பு நிதியில் உள்ள பணத்தை உரியவர்களின் அனுமதியை பெறாமலேயே எடுத்துக் கொள்ள முடியும்."

டாடா, பிர்லா, அதானி, அம்பானி போன்ற பெரிய முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை. மத்திய அரசுக்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது ஓரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே உணவு, ஒரே உடை,

ஒரே கலாச்சாரம், ஓரே பண்பாடு. இவைகள் தான்.

இதற்கு பெயர் தான் இந்து - இந்தி - இந்தியா!

(நிறைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner