எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, மே 28- தூத்துக்குடி யில் ஸ்டெர்லைட் போராட்டத் தின் போது தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூருவில் போராட்டம் நடந்தது. தூத்துக்குடியில் ஸ்டெர் லைட்டிற்கு எதிராக மக்கள் போராட்டத்தின் போது அங்கு இருந்த மக்கள் மீது தமிழக காவல்துறை கொடூரமாக துப் பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன் னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரண மாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத் தப்பட்டு வருகிறது. தமிழகத் தில் மட்டுமில்லாமல் இங்கி லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற இடங்களிலும் போராட் டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை பெங் களூருவில் போராட்டம் நடை பெற்றுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் போராட் டம் நடந்தது. பெங்களூருவில் இருக்கும் முக்கியமான அரசு கட்டிடமான மயோ ஹாலில் போராட்டம் நடைபெற்றது. பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக இதில் முழக்கம் எழுப் பினார்கள். மேலும் தமிழக அரசை கண்டிக்கும் விதத்தில் பதாகைகள் தாங்கி போராட்டம் நடத்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner