எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை அய்.அய்.டி. வெளியீடு

மும்பை மே 30 இந்திய வங்கி நிறுவனங்கள் வழங்கி வரும் ஜீரோ பேலன்ஸ், ஜீரோ கட்டணங்கள் சேமிப் புக் கணக்குகள் குறித்து ஆர்பிஅய் வங்கி அய்பிஎல் போட்டிகளின் போது விளம் பரப்படுத்தி வந்தது. எனினும், கோடிக் கணக்கான, அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும்  ஜன்தன் வங்கிக்கணக்கு திட்டங்களின் கீழ் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச பரிவர்த்தனை வரம்பு அடிப் படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும்  ஜன் தன் வங்கிக்கணக்கு திட் டங்கள் கீழ் திறக்கப்பட்டுள்ள சேமிப்புக் கணக்குகளில் மாதம் 4 முறை மட்டுமே இலவசமாக டெபிட் அதாவது பணம் எடுக்கக் கூடிய பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்.

கூடுதல் பரிவர்த்தனை  மூலம் பணம் எடுக்கக் கட்டணம் வசூலிக்க வங்கி களுக்கு அனுமதி இல்லை. எனவே வங்கிகள் இதுபோன்ற சேமிப்புக் கணக் குகளுக்கு மாதத்திற்கு 4 இலவச டெபிட் பரிவர்த்தனைகளுக்குக் கூடுதலாகப் பணம் எடுக்க முடியாத அளவிற்குத் தடைபோட்டுள்ளன.

சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் எச்டிஎப்சி மற்றும் சிட்டி வங்கி நிறுவ னங்கள் இலவச டெபிட் பரிவர்த்தனை வரம்பு முடிந்த உடன் அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் மற்றும்  ஜன் தன் வங்கிக்கணக்கின் திட்டங்கள் கீழ் உள்ள கணக்குகளைச் சாதாரண சேமிப்பு கணக்குகளாக மாற்றுகின்றனர். இதனால் சாதாரணச் சேமிப்புக் கணக்குகளுக்கு உள்ள அபராதம் போன்றவற்றைச் செலுத்த வே ண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட் டுள்ளனர். ஏன் இந்த வரம்பு அடிப்படை சேமிப்புக் கணக்குகள் என்பது நிதி சேமிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கொண்டு வரப்பட்டது. அவற்றை அனைத்து வங்கிகளும் வழங்க வேண்டும் என்பதற்காக ரிசர்வ் வங்கி அதிகபட்சமாக 4 பரிவர்த்தனைகள் என்ற வரம்பை வைத்துள்ளது.

ஆனால் வங்கிகள் ஏடிஎம் பரி வர்த்தனை, ஆர்டிஜிஎஸ், என்ஈஎப்டி, வங்கியில் பணம் எடுப்பது, இணைய தளப் பணப் பரிவர்த்தனை மற்றும் தவணை செலுத்தல் என அனைத்து டெபிட் பரிவர்த்தனைகளுக்கும் சேர்த்து மாதம் 4 என முடிவு செய்துள்ளன.  இதனால் அடிப்படை சேமிப்பு கணக்கு அல்லது ஜன் தன் வங்கி கணக்குகளில் இருந்து 4 முறை பணத்தினை 20ஆம் தேதிக்குள் எடுத்துவிட்டால் பணம் தேவைப்பட்டாலும் அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டும் என்ற சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அடிப்படை சேமிப்புக் கணக்குகளில் உள்ள இது போன்ற சிக்கல்கள் குறித்து ஆய்வு செய்து வந்த ஆஷிஷ் தாஸ் என்பவர் ஓர் அறிக்கையினை வெளியிட் டுள்ளார். வங்கிகள் இந்திய ஸ்டேட் வங்கி (எஸ்பிஅய்) மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவை ஒரு மாதத்தில் 4 முறை பணத்தினை எடுத்தால் கூடுதல் பரிவர்த்தனைகளுக்குத் தடை விதிக் கின்றன. எச்டிஎப்சி மற்றும் சிட்டி வங்கிகள் சாதாரண சேமிப்புகளாக மாற்றுகின்றனர். அய்சிஅய்சிஅய் வங்கி முதலில் 5ஆவது பரிவர்த்தனை முதல் கட்டணம் வசூலித்து வந்த நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலை யில் பணத்தினைத் திருப்பி அளித்தது மட்டும் இல்லாமல் 4 பரிவர்த்தனை களுக்கு அதிகமாகவும் இலவசமாக வழங்கி வருகிறது.

பிற வங்கிகளில் நிலைமை என்ன வெனத் தெரியவில்லை என்று ஆஷிஷ் தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கவே இந்த அடிப்படை சேமிப்புக் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆர்பிஅய் விதிகள் வங்கிகளுக்கு முட்டுக்கட்டை யாக உள்ளன. அதில் இருந்து அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வரம்பற்ற பரிவர்த்தனைகள் செய்ய விலக்கு அளிக்க வெண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்ச இருப் புத் தொகை ஜன் தன் வங்கிக்கணக்கு போன்ற இலவச சேமிப்பு கணக்குகளைப் பராமரிக்க முடியாமல்தான் சாதாரணச் சேமிப்புக் கணக்குகள் மீது குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்காத கணக் குகள் மீது அபராதம் விதிப்பதாக எஸ்பிஅய் வங்கி குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

வங்கி கணக்குகள் இல்லாத ஒரு கோடி இந்தியர்களிடமும் புரட்சி ஏற் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், அரசு வழங்கும் மானியங்களை வங்கி கணக்கில் பெறவும், நிதி சேகரிப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஜன் தன் வங்கிக்கணக்கு அறிமுகம் செய்யப்பட்ட தாகக் கூறப்பட்டது. திட்டம் ஆரம்பித்த ஒரே நாளில் ஒரு கோடி பேர் இந்தக் கணக்கை ஆரம்பித் ததாகவும் மத்திய அரசு கொக்கரித்தது.

வங்கி அதிகாரிகள் ஜன் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே அனைத்துப் பொதுத் துறை வங்கிகளுக்கும் இலக்கு அளிக்கப்பட்டு இந்த ஜன் தன் வங்கி கணக்குகளைத் துவக்க வாடிக்கையாளர்கள் விவரங்களைப் பெற்று, துவக்க நாளில் இந்த ஒரு கோடி கணக்குகள் துவங்கப் பட்டது வேறு கதை. ஆனால் இப்போது இந்த இலவச கட்டணமில்லா ஜன் தன் வங்கி கணக்கு துவங்கியவர்களைப் புலம்ப வைக்கும் அளவிற்கு அதில் சிக்கல்கள் உள்ளதாக அறிக்கை ஒன்று மும்பை அய்.அய்.டி.யால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner