எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ மே 31 உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாதுன் தொகுதி சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் மீது பாலியல்வன்கொடுமை புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது,

பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப் பினர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. உன்னாவ் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் மீது சிறுமி ஒருவர் அளித்த பாலியல் புகார் குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம் அவரை சிறையில் அடைத்துள் ளது, ஜம்முவில் உள்ள கத்துவா பகுதியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்ட கொடூர நிகழ்வில் ஒரு பார்ப்பன பூசாரி, அவரது 18 வயது மகன், இரு காவல்துறை அதிகாரிகள் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் என 8 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதே போல் லக்னோவில் பாஜக பிரமுகரும் வழக்குரைஞருமான சதீஷ் சர்மா என்பவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் பாதுன் சட்டப்பேரவை உறுப்பினராக குஷகரா சாகர்மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இப்புகார் தொடர்பாக காவல் துறையினர் சட்டப்பேரவை உறுப் பினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான சட்டமன்ற உறுப் பினரின் வீட்டில் எனது தாயார் வேலை செய்துவருகின்றார். அவரை நான் பார்க்கச் சென்ற போது என்னை சட்டப்பேரவை உறுப்பினராக குஷ்கரா சாகர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். இதுதொடர் பாக அவர் என்னை திருமணம் செய்து கொள்கிறேன், என்று கூறிகாவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டாம் என்று எனது தாயாரிடமும் வாக்குறுதி அளித் திருந் தார். இதைதொடர்ந்து என்னை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த நிலையில் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சட்டப்பேரவை உறுப்பினரை வற்புறுத்தினேன். ஆனால் ஏற்கெனவே எனக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளதால் நான் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது, வேண்டுமென்றால் உனக்கு நிறைய பணம் தருகிறேன் என்று கூறினார். இதற்கு நான் மறுத்த நிலையில் என்னையும் எனது தாயாரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதனை அடுத்து நான் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன் ஆனால் எனது தாயாரும் உறவினர்களும் என்னைக் காப்பாற்றினர்.  இந்நிலையில் எனக்கு நீதிவேண்டும் என்று கூறி நான் காவல்துறையினரிடம் சட்டப் பேரவை உறுப்பினர் மீது பாலியல் வன் கொடுமை புகார் அளித்துள்ளேன் என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பெண்ணின் புகாரை ஏற்றுகொண்ட பாதுன் மாவட்ட காவல்துறை ஆணையர் சட்டப்பேரவை உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.   உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பாலியல் விவகாரத்தில் சிக்கும் பாஜக பிரமுகர்களின் எண்ணிக்கை அய்ந்தாக உயர்ந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner