எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சந்திரபாபு நாயுடு விளாசல்!

அமராவதி, ஜூன் 1 -ஆந்திர அரசிடம் கணக்கு கேட்க அமித்ஷா யார்; என்றும், ஒரு மாநிலஅரசின் நிர்வாகத்தில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா தலையிட யார் அதிகாரம் கொடுத்தது? என்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லியில் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஆந்திர தலைநகர் அமரா வதி கட்டுமானத்திற்காக மத் திய அரசு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது; ஆனால் சந் திரபாபு நாயுடு அரசு, ஒரு செங் கல்லைக் கூடஎடுத்து வைக்க வில்லை; மேலும் நிதிசெல விடப்பட்டதற்கான ஆவணங் களையும் இன்னும் அளிக்க வில்லை என்று கூறியிருந்தார்.

இதற்குத்தான் சந்திரபாபு நாயுடு தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில் பேசிய அவர், ஆந்திர அரசிடம் கணக்கு கேட்க அமித்ஷா யார்? விஜயவாடாவின் செலவினக் கணக்கு ஆவணங்களைப் பற்றி, அவர் எதற்குக் கேட் கிறார்? என்று கேள்வி எழுப் பியுள்ளார். 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமராவதி தலைநகர் உருவாக்கத் திட்டத் திற்கு, மத்திய அரசு வெறும் ஆயிரத்து 500 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால், குண்டூர் வடிகால் திட்டத்திற்கு ஒதுக்கிய ரூ. 1000 கோடியைச் சேர்த்து அமித்ஷா ரூ. 2 ஆயிரத்து 500 கோடி என்று கணக்கு காட்டுகிறார் என்று கூறியிருக்கும் சந்திரபாபு நாயுடு, இந்த நிதிகளைப் பயன்படுத்தியதற்கான சான்றி தழ்களை முன்னரே தாக்கல் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியே இருப்பினும், மத்திய அரசுக் கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள விவகாரம் குறித்து பேசஅமித்ஷா யார்? ஆவணங்களை அளிக்க வில்லை எனப் பிரதமர் அலு வலகமோ, மத்தியஅரசோ கூறாதபோது, ஆந்திர அரசுக்கு, மத்திய அரசு ஒதுக்கும் நிதி குறித்து கேள்வி எழுப்ப- ஒரு கட்சியின் தலைவராக மட் டுமே இருக்கும் அமித்ஷாவுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்றும் கேட்டுள்ளார்.மேலும் அவர் பேசியிருப்பதாவது:

குஜராத்தில் உள்ள தோலிரா நகரை, டில்லியைக் காட்டிலும் 6 மடங்குபெரிதாக- சீன நாட் டின் ஷாங்காய் நகரைக் காட் டிலும் பெரிதாக உருவாக் குவேன் எனப் பிரதமர் மோடி கூறுகிறார். இதற்காக ரூ. 95 ஆயிரம் கோடியை மோடி அரசு செலவு செய்கிறது. ஆனால், ஆந்திர மாநிலம் அமராவதி நகருக்கு மட்டும் நிதி வழங்க மறுத்து பாகுபாடு காட்டுகிறது. இவ்வாறு சர் வாதிகார மனப்போக்குடன் மாநிலங்களை அணுகும்- மத் தியில்ஆளும் மோடி அரசுக்கு மாநிலங்கள் ஏன் வரி வசூ லித்துக் கொடுக்க வேண்டும்? நாங்கள் யாருக்கும் அஞ்ச மாட்டோம், மாநிலத்தின் வளர்ச்சிக்காக எதையும் தியா கம் செய்யத் தயாராக இருக் கிறோம். ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு தகுதி கிடைக்கும் வரை, போலாவரம் திட்டம் முடியும் வரை எங்களின் போராட்டம் ஓயாது. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner