எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 1- -மகாபாரதக் காலத்திலேயே, டிவி, லைவ் டெலிகாஸ்ட் எனப்படும் நேரடி ஒளிபரப்பு எல்லாம் இருந்தது என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா கதை யளந்துள்ளார்.

இந்தி பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தினேஷ் சர்மா பேசியுள்ளார். அப்போது தான் இவ்வாறு பேசி சிரிப்புக் காட்டியுள்ளார்.

அஸ்தினாபுரத்தில் அமர்ந்த படி, போரின்போது பறவை யின் பார்வையின்வழியே போர் நடப்பதை, திருதராஷ்ட் டிரனுக்கு சஞ்சயன் விவரித்த காலத்திலிருந்தே ஊடகத்துறை இருப்பதாகவும், நேரலை இல் லாமல் இருந்திருந்தால் சஞ்சய னால் எவ்வாறு போர்க்காட்சி களை விளக்கி இருக்கமுடியும் என்றும் தினேஷ் சர்மா கேட் டுள்ளார். மேலும், கூகுள் எல் லாம் இப்போதுவந்த தொழில் நுட்பம்; ஆனால் நாரதர் அந்த காலத்திலேயே கூகுளாக செயல் பட்டவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

நாராயணா மந்திரம் ஓதிய படி ஒரு இடத்தில் இருந்து மற் றொரு இடத்துக்கு செய்திகளை சேர்க்கக் கூடிய ரிப்போர்ட்டர் தான் நாரதர் என்றும் சிரிக்கா மல் சர்மா பேசியுள்ளார். சேட் டிலைட், இண்டர்நெட், பிளாஸ் டிக் சர்ஜரி, புவி ஈர்ப்புத் தத்து வம் எல்லாம் மகாபாரதம், இரா மாயணம் காலத்திலேயே இந் தியாவில் இருந்தது என்று பிர தமர் மோடிஉட்பட பாஜக தலை வர்கள் அத்தனை பேரும், பேச ஒலி பெருக்கியை பார்க்கும் போதெல் லாம் உளறுவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையிலேயே உத்தரப்பிரதேச பாஜக துணை முதல்வர் தினேஷ் சர்மாவும் தற்போது உளறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner