எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பீகார், ஜூன் 2- புத்த கயாவில் நடந்த குண்டுவெடிப்பு வழக் கில் குற்றவாளிகள் என அறி விக்கப்பட்ட 5 பேருக்கும் ஆயுள் தண்டனையை தேசிய புலனாய்வு அமைப்பு (என் அய்ஏ) நீதிமன்றம் விதித்து உள்ளது.

புத்த கயாவில் 2013-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி 10 வெடிகுண்டுகள் வெடித் தன. மேலும் அங்கிருந்த 3 வெடி குண்டுகளை வெடிகுண்டு வல்லுநர்கள் செயலிழக்கச் செய்தனர். கோயில் பகுதியில் பதற்றத்தை உண்டாக்கவும், அங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களைக் கொல்லவும் சதி செய்து அந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட் டிருந்தன. இதில் 2 புத்த பிட் சுக்கள் உள்பட 5 பேர் காய மடைந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த என்ஏஅய் அதிகாரிகள் 6 பேரைக் கைது செய்து அவர் கள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இவர்கள் இந்தியன் முஜாகிதீன் தீவிர வாத அமைப்பைச் சேர்ந்தவர் கள். இதுதொடர்பான வழக்கு பாட்னாவிலுள்ள என்அய்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது.

இதில் தவுபீக் அகமது என் பவர் 17 வயதுக்குள்பட்டவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

எஞ்சிய உமர் சித்திக்கி, அசாருதீன் சித்திக்கி, ஹவுசர் அலி, முஜிபுல்லா அன்சாரி, இம்தியாஸ் அன்சாரி ஆகிய 5 பேரும் குற்றவாளிகள் என் நீதிபதி மனோஜ் குமார் சின்ஹா அறிவித்திருந்தார்.

நேற்று அவர்கள் 5 பேருக் கும் தண்டனை அறிவிக்கப் பட்டது. அவர்கள் 5 பேருக் கும் ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப் பளித்தார். மேலும் அவர்களுக் குத் தலா ரூ.50 ஆயிரம் அப ராதத்தையும் நீதிபதி விதித் தார்.

குண்டுவெடிப்பில் உயிர்ப் பலி எதுவும் நிகழவில்லை என்பதால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படவில்லை என என்ஏஅய் வழக்குரைஞர் லாலன் குமார் சின்ஹா செய் தியாளர்களிடம் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner