எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நீர் தீர்ப்பாயத்தின்

முடிவு - 05.02.2007

1) Name of the Cauvery Water Management Mechanism Cauvery Management Board (CMB)

காவிரி மேலாண்மை வாரியம்

2) The Head quarters of both CMB and Cauvery Water Regulating Committee (CWRC) shall be at Bengaluru.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றின் தலைமையிடம் பெங்களூருவில் அமைந்திடும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு

வெளியிட்ட திருத்திய வரைவுத் திட்டம் - 18.05.2018

Cauvery Water Management Authority (CWMA)

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

The Head quarters of CWMA shall be at New Delhi and that of Cauvery Water Regulating Committee (CWRC) at Bengaluru.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் புது டில்லியிலும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைமையிடம் பெங்களூருவிலும் அமைந்திடும்.

மத்திய அரசின் வரைவுத் திட்டத்தில் கீழ்பாசன மாநிலங்களின் காவிரி நீர்உரிமைப் பாதுகாப்பு பற்றிய தெளிவின்மை

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் காவிரி நீர் மேலாண்மை வாரியம், 'தன்னாட்சி' (independent) பெற்ற அதிகாரம் கொண்ட அமைப்பு என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட மத்திய அரசின் திருத்திய வரைவுத் திட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெளிப்படையாக 'தன்னாட்சி' கொண்ட அமைப்பு எனக் குறிப்பிடப்படவில்லை. காவிரியின் மேல் பாசன மாநிலம் கீழ்ப்பாசன மாநிலங்கள் பெறும் நதி நீர் உரிமையினை பாதிக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளக் கூடாது என காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கின்ற மாநிலங்களின் ஒப்புதலோடு நீர் திறப்பு முறையினை (pattern of water deliveries) மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

“Any upper riparian states shall not take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian states. However, the states concern can by mutual agreement and in consultation with the regulatory authority make any amendment in the pattern of water deliveries.”

- Cauvery Water Tribunal Award - 5.2.2007

நடுவர் மன்றத் தீர்ப்பிலோ, மத்திய அரசின் வரைவுத் திட்டத்திலோ மேல் பாசன மாநிலம் காவிரியில் புதிய அணைகள் எதுவும் கட்டக் கூடாது என தெளிவாகக் கூறப்படவில்லை. நீர் திறப்பு முறை பற்றி மாறுதல் செய்து கொள்ளலாம் என்று மட்டுமே காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் கூறப்படாமல் மத்திய அரசின் இறுதி வரைவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்ட நடைமுறை விதிகள்

காவிரி திருத்திய நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்படாத சிலவற்றை, மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தில் வரம்பு மீறி சேர்த்துள்ளது.

இறுதி வரைவு செயல்திட்டம் 9(3) பிரிவு XVI-இல்

“The Authority will advise the party states to take suitable measures to improve water use efficiency, by way of promoting micro-irrigation (drip and sprinkler), change in cropping pattern, improved agronomic practices, system deficiency correcition, command area development etc.”

வரைவு செயல்திட்டம் 9(3) பிரிவு XVII-இல்

“The Authority will advise the party states to adopt efficient technologies for water conservation and preservation.”

"காவிரிப் படுகை மாநிலங்கள் என் னென்ன பயிர் செய்ய வேண்டும் என்ப தயும், சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடித்து நதிநீரை திறம்பட பயன்படுத்திட முடியும் என்பதை யும் சாகுபடி செய்யப்படும் பயிர் வகை களில் மாற்றம் செய்தல், உரிய உழவியல் முறைகள், பற்றாக்குறையினை சரிசெய்தல் ஆயக்கட்டு பாசனப் பரப்பு மேம்பாடு பற்றியும் மேலாண்மை ஆணையம் ஆலோசனை வழங்கிட முடியும், என்று வரைவு செயல்திட்டத்தின் பிரிவு ஙீக்ஷிமி-இல் கூறப்படுகிறது. மேலும், காவிரிப்படுகை மாநிலங்களுக்கு திறன்மிகு நீர் காப்பு மற்றும் சேகரிப்புத் தொழில் நுட்பப் பற்றிய ஆலோசனைகளையும் மேலாண்மை ஆணையம் வழங்கிட முடியும் என பிரிவு ஙீக்ஷிமிமி-இல் கூறப்பட்டு இருப்பது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை ஆகும்.

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பில் குறிப் பிடப்படாத இந்த ஆலோசனைகள் மத் திய அரசின் திருத்திய வரைவு திட்டத்தில் இடம்பெற்றிருப்பது தேவையில்லாதது. மத்திய அரசின் ஆதிக்க அணுகுமுறை யினை வெளிப்படுத்தும் விதத்தில் மேற் குறிப்பிட்ட ஆலோசனை விதிகள் சேர்க் கப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner