எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, ஜூன் 4 உத்தரப் பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் வருகைக்காக கழிப் பறை சுவரில் காவி நிறம் பூசப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக முதல்வராக சாமியார் ஆதித்யநாத் பொறுப் பேற்றபின், அம்மாநில தலைமைச் செய லகக் கட்டடம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, அரசுப் பேருந்துகள், இசுலாமிய மதரசாக்கள் என அனைத்தையும் காவி நிறத்துக்கு மாற்றி வருகிறார்.

உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசின் உத்தரவைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் நடைபெறுகின்ற அரசு நிகழ்ச்சிகள், முதல்வர் கலந்து கொள்ளும் அரசு விழாக் கள் அனைத்திலும் காவி நிறமானது புகுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஹர்தோய் மாவட்டத்தில் அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவச வீடுகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கும் நிகழ்ச்சியில் சாமியார் ஆதித்ய நாத் கலந்துகொள்வதையொட்டி, அங்கு ஏழை மக்களுக்கு வழங்கப்பட இருந்த வீடுகளுக்கும், கழிப்பறைகளுக்கும் காவி நிறம் பூசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல்,சாமியார் ஆதித்ய நாத் பயன்படுத்துவதற்காக தயார் செய்யப்பட்ட கழிப்பறையில் வெள்ளி நிற டைல்ஸ் ஒட்டப்பட்டு இருந்தது. அதை நீக்கிவிட்டு, காவிநிறத்தில் டைல்ஸ் கற்கள் ஒட்டப்பட்டன. இதன் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பரப்பியதால், வைரலானது.

இது குறித்து அலுவலர்களிடம் கழிப் பறை கூட காவி நிறத்தில் தயாராகிறதே எனக் கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டனர்.

உ.பி. முதல்வருக்கு கருப்புக் கொடி

உத்தரப்பிரதேச மாநில பாஜக முதல்வர்  ஆதித்யநாத் எட்டாவா நகருக்கு சென்றார். அப்போது கச்சவுரா பகுதியில் அவருக்கு எதிராகத் திரண்டவர்கள் கருப்புக் கொடி காட்டினார்கள். கருப்புக் கொடி காட்டியவர் களை காவல்துறையினர் கைது செய்தார்கள்.

இந்நிலையில் காவல்துறையினர் கூறிய தாவது:

முதல்வருக்குக் கருப்புக் கொடி காட்டிய 10 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 10 பேரும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு தனிப் பட்ட உத்தரவாதத்தின் அடிப் படையில் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner