எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 4 -மக்களவைத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்கு, மாநிலக் கட்சிகளுடன் கைகோர்க்க காங்கிரஸ் தயாராகி வருகிறது. அந்த வகையில், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங் களில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி யுடனும், டில்லி, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியுடனும் கூட்டணி சேர காங்கிரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே, கருநாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் குமாரசாமியுடன் இணைந்து பாஜகவை வீழ்த்தி யது போல, மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர் தலில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் காங்கிரசு கரம் கோர்க்கிறது.

மத்தியப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடத்தி வரும்நிலையில், பகுஜ னுடன் சேர்ந்தால், நிச்சயமாக பாஜக-வை படுதோல்வி அடை யச் செய்யலாம் என்று காங் கிரசு நம்புகிறது. இங்கு பாஜகவுக்கு 40 சதவீத அளவில் வாக்குகள் உள்ளன. காங்கி ரசுக்கு 35 சதவிகித வாக்குகள் உள்ளன. இந்நிலையில் 7 சதவிகித வாக்கு வங்கியை வைத்துள்ள பகுஜன் சமாஜ் இணையும் பட்சத்தில் பாஜக-வை எளிதாக வீழ்த்தலாம் என் பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாகவும் உள்ளது.ஏற் கெனவே, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவு கான் மற்றும்பாஜக அரசுக்கு எதிராக அங்கு எதிர்ப்புஅலை வீசுவதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோலவே, டில்லி ஆம்ஆத்மி ஆட்சியை மத்திய பாஜக அரசு பல வகைகளிலும் பழிவாங்குவதால், கெஜ்ரிவால் கடும் ஆத்திரம் அடைந் துள்ளார். அரியானா மாநில பாஜக அரசு, டில்லிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை குறைத் தது அவரை மேலும் ஆவே சத்திற்கு உள்ளாக்கி இருக் கிறது. எனவே, பாஜக-வை வீழ்த்துவதே தனது முதற்பணி என்ற நிலைப்பாட்டுக்கு கெஜ்ரிவால் வந்திருப்பதாகவும், இதனால் காங்கிரசுடன் அவர் கூட்டணி சேரலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner