எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜூன் 4 கருநாடக துணைமுதல்வர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று (2.6.2018) அளித்த பேட்டி வருமாறு: இந்திய  மக்கள் தொகையில் 60 சதவீதம் பேர் இளைஞர்கள்.

மக்களவை தேர்தலின்போது பிரச்சார யுக்தி மற்றும்  நரேந்திர மோடியின் வார்த்தை ஜாலத்திற்கு இளைஞர்கள் மயங்கி பாஜவிற்கு வாக்கு  அளித்தனர். பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் சில லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்  மட்டுமே மத்திய அரசின் சார்பில் உருவாக் கப்பட்டுள்ளது. அதுபோல்  விவசாயிகளின் துயர் துடைப்பதற்கும் மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்கவில்லை. இளைஞர்கள், பெண்களை பிரதமர் நரேந்திர மோடி  முற்றிலும் ஏமாற்றி விட்டார்.  இதைதவிர மத்திய பாஜக அரசு எந்த சாதனையும் செய்யவில்லை. மாநிலத்தில் தற்போதுள்ள கூட்டணி தற்காலிகமாக இல்லாமல் அய்ந்தாண்டுகள் பதவி நிறைவு  செய்யும் வகையில் திட்டமிட் டுள்ளோம். அடுத்தாண்டு நடக்கும் மக்களவை  தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும். இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.காஞ்சி கோயில் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு

காஞ்சிபுரம், ஜூன் 4 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியானார். மீட்கச் சென்ற சிறுவர்கள் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி  விழா நடைபெற்று முடிந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றபோது கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் காஞ்சிபுரம் திருவீதிப்பள்ளத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தினேஷ் கண்ணன் தனது நண்பர்கள் 8 பேருடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தினேஷ் கண்ணன் குளத்தில் மூழ்கியுள்ளார். அவரது அலறல் ஒலியைக் கேட்டு நண்பர்கள் மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், தினேஷ் கண்ணன் (14) நீரில் மூழ்கி உயிரிழந்தார். தண்ணீரில் தத்தளித்த குமார் மற்றும் முருகேஷ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner