எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க. ஆளும்  ம.பி. தலைநகர் போபாலில் குடிநீர்

மனித சிறுநீரைக் காட்டிலும்  மோசமானது!

போபால், ஜூன் 8- மனித சிறுநீரைக் காட்டிலும் போபால் குடிநீரில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக ஸ்வச் சர்வேஷான் கணக்கெடுப்பு 2018 அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர்தான் போபால். இங்கு ரயில் நிலை யங்கள், அரசு மருத் துவமனைகள், அரசுக் கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், நகராட்சி கூட்டு றவு தண்ணீர் தொட்டிகள், தொழிற்சாலைகள், கைப் பம் புகள் மற்றும் பிற பொது இடங் களிலிருந்து எடுக்கப்பட்ட தண் ணீரின் 42 மாதிரி களை ஜந்தா கீ என்ற ஆய்வகத்தில் டாக்டர் சுபாஷ் சி பாண்டே  என்பவர்ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்தான், சிறுநீரில் இருப்பதைக் காட்டி லும் மோசமான கிருமிகள், போபால் நகர குடி நீரில் இருப் பது தெரிய வந் துள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பின் வரை யறைப்படி, ஒரு லிட்டர் நீரில் 0.3 மில்லி கிராம்தான் கோலிபார்ம் எனும் பாக்டீரியா இருக்கலாம். மேலும் கால்சியம், பொட் டாசியம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் ஒரு லிட்டர் நீரில் அதிகபட்சமாக 500 மில்லி கிராம்  இருக்கலாம். ஆனால், போபால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் அதிர்ச்சி அளித்துள் ளன. இங்கு ஒரு லிட்டர் நீரில் 1,100 முதல் 2,400 அதிகபட்ச சாத்திய எண்ணிக்கையில் கோலி பார்ம் பாக்டீரியாக்கள் இருந்துள் ளன. இதேபோல கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுப் பொருட்கள் 495 முதல் 772 மில்லி கிராம்வரை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாக்டீரியாக்கள் இருந்துள் ளன. மேலும், இந்த நீரைக் குடிப்பதால் வயிறு தொடர்பான நோய்கள், முடி கொட்டுதல், ரத்த அழுத்தம், தலைவலி மற்றும் புற்றுநோய் கூட ஏற்படலாம் என் பதும் தெரியவந்துள்ளது. இந் நிலையில் ஆய்வு மேற் கொண்ட மருத்துவர், தனது முடிவுகளை சுட்டிக்காட்டி, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையிடப் போவதாக கூறியிருக்கிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner