எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாண்ட்சார், ஜூன் 8 ''ம.பி.,யில், காங்., ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்" என, அக்கட்சி தலைவர், ராகுல் கூறிஉள்ளார்.

மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் மாண்ட்சார் மாவட்டத்தில், காவல்துறை துப்பாக்கி சூட் டில், ஆறு விவசாயிகள் உயிரிழந்த சம்பவம் நடந்து, ஒரு ஆண்டுஆனதை நினைவு படுத்தும் வகையில், நேற்று நிகழ்ச்சி நடந்தது.

இதில், காங்., தலைவர், ராகுல் பேசியதாவது:

ம.பி.,யில், இந்தாண்டு இறுதியில் நடக்கவுள்ள சட்ட சபைத் தேர்தலில், காங்., வென்று ஆட்சியை பிடித்தால், 10 நாட்களில், விவசாய கடனை தள்ளுபடி செய்வோம். இங்கு, ம.பி., மாநில, காங்., தலைவர், கமல்நாத், தேர்தல் பிரச்சார குழு தலைவர், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் அமர்ந் துள்ளனர். அவர்கள் முன்னிலையில், இந்த வாக் குறுதியை அளிக்கிறேன். மாண்ட்சார் மாவட்டத்தில், கடந்தாண்டு, காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், ஆறு விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்துக்கு காரண மானோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயிகளுக்கு உரிய கவுரவம் அளிக்கப்பட வேண்டும். . உங்களுக்கு, 15 லட்சம் ரூபாய் தருவதாக, நான் கூறப்போவதில்லை. ஆனால், நான் சொல்வதை கட்டாயம் நிறைவேற்றுவேன். என், 'மனதின் குரல்' பற்றி உங்களுக்கு சொல்லப் போவ தில்லை. மாறாக, நீங்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பேன். பிரதமர் நரேந்திர மோடிக்கும், பா.ஜ.,வுக்கும், விவசாயிகள் பற்றிய கவலை கிடையாது. அவர்களுக்கு, தங்கள் பணக்கார நண்பர்களின் நலன் மட்டுமே முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner