எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஜூன் 10 நீட் தேர்வில் தோல்வி அடைந் ததால் மனவேதனை அடைந்த கேரள மாணவி தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப் பட்டதாவது:-

கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள பயலூர் பகு தியைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 42), விவசாயி. இவரு டைய மனைவி மல்லிகா (41). இவர்களுடைய மகள் சவுமியா (19). மருத்துவப் படிப்பு படிக்க விரும்பிய சவுமியா நடந்து முடிந்த நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியிருந்தார். இதில் அவர் தோல்வி அடைந்த தால் கடந்த சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை நாராயணன் தனது மனைவி யுடன் கடைவீதிக்கு சென்று இருந்தார். மாலை 6 மணியள வில் அவர்கள் திரும்பி வந்தபோது சவுமியா வீட்டில் தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அலறினார்கள். இதையடுத்து, அக்கம், பக்கத்தில் இருந்த வர்கள் சவுமியாவை மீட்டு கொல்லங் கோடு அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென் றனர். அங்கு அவருக்கு மருத் துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சவுமியா பரிதாபமாக இறந் தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொல்லங்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் கேரள மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner