எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருமலை, ஜூன் 10 திருப்பதி கொர்லகுண்டா பகுதியில் வசித்து வரும் சுப்ரமணியம், வனஜாகுமாரி இணையருக்கு இரு மகன்கள் உள்ளனர். சுப்ரமணியம் இறந்த பின் அவரது மூத்த மகன் திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இளைய மகன் பாலாஜி (வயது 20) பிளஸ்2 வகுப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை எழுதினார்.

ஆனால்,  தோல்வியையே தொடர்ந்து சந்தித்தார். இதனால் மன வருத்தமடைந்த அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த திருப்பதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner