எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மும்பை, ஜூன் 10 மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் தென் மேற்கு பருவமழை தொடங்கி யுள்ளது. அங்கு சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக மாநகர ரயில்கள் தாமதமாக இயக் கப்பட்டன. அதே சமயம், இரண்டு விமானங்கள் தரையிறங்குவது தாமதமானது.

தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இதில் காயமடைந்த மேலும் 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றொரு பகுதியில், மழையின் போது இரு சக்கர வாகனம் லாரி மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, அதை ஒட்டியுள்ள தாணே - கொங்கன் பகுதிகள், அஹமதுநகர், பர்பானி மற்றும் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மய்ய இணை இயக்குநர் கே.எஸ்.ஹோசாலிகர் தெரிவிக் கையில், புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை காலை 8.30 வரை யிலும் மிக, மிக பலத்த மழை பெய்தது என்றார்.

இதற்கிடையே, புறநகரில் உள்ள மத்திய ரயில்வே முனை யத்தில் இருந்து இயக்கப்படும் மாநகர ரயில்கள், மழை காரண மாக 15 நிமிடங்கள் வரை தாமத மாக இயக்கப்பட்டன. எனினும், ரயில்கள் எதுவும் ரத்து செய்யப் படவில்லை.

மோசமான வானிலை காரண மாக இரண்டு விமானங்கள் தாமதமானதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விமானப் புறப் பாடு 40 நிமிடங்களும், விமான வருகை 20 நிமிடங்களும் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது.

மீட்புப் பணிகள்: மழை பாதிப்புகளை சீரமைக்கும் பணி யை மகாராஷ்டிர மாநில அரசு உடனடியாக தொடங்கியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner