எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேராசிரியர் மு.நாகநாதன்

"இந்தியா ஓர் ஒன்றியம் என்றே குறிப்பிட வேண்டும்" என அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டார்.

"வேற்றுமையில் ஒற்றுமையைக் காணுவதுதான் இந்தியா" என்றார் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு.

இந்த வேற்றுமைகளை இந்திய அரசமைப்புச் சட்ட அவையின் விவாதங்களில் காணலாம்.

"இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கும் நிலையிலே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்குள் இந்தியை தேசிய மொழியாக ஏற்பதில் கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன" என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்திய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு அறிக்கையைத் உருவாக்கும் போது இந்தியை, தேசிய மொழியாக ஏற்க வேண்டுமென்ற  கருத்து முன் வைக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக் கூட்டத் தில் என்ன நடந்தது என்பதை நான் தெரிவிப்பது அரசமைப்புச் சட்டம் தொடர்பான ரகசியத்தை வெளி யிட்டேன் என்ற நிலைக்கு நான் தள்ளப்படமாட்டேன் என்று எண்ணுகிறேன்."

"இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 115ஆவது பிரிவு ஏற்படுத்திய கருத்து வேறுபாட்டை வேறு எந்தப் பிரிவும் உருவாக்கவில்லை. எந்தப் பிரிவும் அதிக எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. சூடான விவாதத்தையும் உருவாக்கவில்லை."

"மிக நீண்ட விவாதத்திற்குப் பின் ஓட்டெடுப்பு நடத்திய போது 78 ஓட்டுகள் ஆதரவாகவும், 78 ஓட்டுகள் எதிராகவும் இருந்தன."

"இந்த சம்பவம் ஓட்டு பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை.

நீண்ட நேரத்திற்குப் பிறகு கட்சியின் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தியபோது இந்திக்கு ஆதரவாக 78 ஓட்டுகளும், எதிராக 77 ஓட்டுகளும் விழுந்தன."

"இந்தி தேசிய மொழியாக ஓரே ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது.

இந்த விவகாரங்களை என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தின் பேரில் நான் குறிப்பிடுகிறேன்."

"அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வரைவினை எழுதும் குழுவிற்குத் தலைவராக நான் இருந்த காரணத்தினால் இயற்கையாகவே காங்கிரஸ் உட்கட்சிக் கூட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது." ( Dr.Babasaheb Ambedkar Writtings and Speeches. Vol-1,Page 148) என்று அறிஞர் அம்பேத்கர் கூறி யுள்ளார்.

இன்றைய இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடி. அரை கால் ஆடையில் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்குச் சென்ற பிராணப் இந்தியாவில் 200க்கு மேற்பட்ட மொழிகளும், 600க்கு மேற்பட்ட பேச்சு வழக்கில் உள்ள மொழிகளும் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் நிதி அமைச்சராக ஒன்றிய அரசில் இடம் பெற்றிருந்த போது இந்தியைத் தவிர்த்த மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்த தொகை என்ன? இந்தி வளர்ச்சிக்கு இது வரை பல ஆயிரம் கோடி ரூபாயைக் கொட்டி வீணாக்கியது தான் ஒன்றிய அரசின் சாதனை.மற்ற மாநில மொழிகளுக்குச் செய்த ஓரவஞ்சனை.

இந்திப் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழி என்ற பொய்யை மீண்டும், மீண்டும் கூறுவதில் காங்கிரஸ் , பாஜக கட்சிகளுக்கு வேறுபாடுகள் இல்லை. 10 ஆண்டுகளுக்கு  ஒரு முறை மக்கள்தொகை புள்ளிவிவரங்களை மாநில வாரியாக வெளியிடும் ஒன்றிய அரசு சேகரிக்கப்பட்ட மாநில மொழி புள்ளிவிவரங்களை ஏன் வெளியிடவில்லை?

ஆங்கில 'இந்து' நாளிதழில் உலக இந்தி மொழி மாநாட்டினை ஒட்டி வெளி வந்துள்ள செய்தி நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

இந்த ஆண்டு மொரிஷியசில் நடைபெறும் மாநாட்டில் இந்தியின் புகழை உலக அளவில் உயர்த்திப் பிடிக்கப் போகிறார்களாம்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இம்மாநாட்டின் செலவை இந்திய ஒன்றிய அரசே மேற்கொள்கிறது.

அய்க்கிய நாடுகள் மன்றத்தில் இந்தியின் ஆளுமையைப் பறைசாற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சகம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் இம் மாநாட்டில் பட்டியலிடப்படுமாம்.

இந்தி மொழியின் ஆய்வாளர்கள் இந்த மாநாட்டின் பயன்பாடுகள் பற்றி வினாக்கள் எழுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே நடைபெற்ற இந்தி மாநாடுகள் சுற்றுலா செல்லும் - "பொழுது போக்கும் மாநாடாக முடிந் துள்ளன".

ஆக்கபூர்வமான மொழி ஆய்வுகள் நடைபெற வில்லை என்று இந்த அறிஞர்கள் சுட்டியுள்ளனர் .

2019 இல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக இந்தி பேசும் மக்களை ஏமாற்றும் தந்திரமே இந்த மாநாடு அவசர அவசரமாக நடைபெறுவதற்குக் காரண மாகும்.

இத்தனை ஏற்பாடுகள் நடைபெற்றாலும் மொரி ஷியஸ் நாட்டில் இயங்கும் உலக இந்தி மாநாட்டுத் தலைமைச் செயலகத்தின் இணைய தளத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் தான் மக்கள் பேசும்மொழி என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ் பல உலகநாடுகளில் அதிகாரபூர்வ மொழி யாக ஏற்கப்பட்டுள்ளது.

உலக மொழியான தமிழ் தொடங்கி மற்ற பல மொழிகளின் உயர்விற்கு ஒன்றிய அரசு உலக அளவி லான மாநாட்டினை ஏன் நடத்தவில்லை?

இந்தியை இவ்வாறு திணித்து மற்ற மாநில மொழி களைத் தொடர்ந்து புறக்கணித்தால்  உலக வரைப் படத்திலிருந்து இந்தியா  காணமால் போகலாம் அல் லவா? 21 நூற்றாண்டில் நடந்த பிரிவினைகள் நமக்குப் பாடமாக அமைகின்றதல்லவா?

எப்போது பாடம் கற்பார்கள்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner