எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுகாத்தி, ஜூன் 15 அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட் டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடாலேண்ட் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் அசாம் கனபரிஷத் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலக போவதாக எச்சரித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அதுல்போரா மாநில விவசாயதுறை அமைச்ச ராக உள்ளார். அவர்தான் இந்த அறி விப்பை வெளியிடடு இருக் கிறார். அசாம் மாநிலத்தில் அண் டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஏராளமான முசுலிம்கள் குடியேறி இருக்கிறார்கள். அவர் களுக்கு இந்திய குடியுரிமை வழங்க கூடாது என்று அசாம் கனபரிஷத் உள்ளிட்ட கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இது சம்பந்தமாக ஏற்கனவே உள்நாட்டு கலவரம் நடந்து வந்தது. ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் 1985ஆ-ம் ஆண்டு இது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், 1971-ஆம் ஆண்டுக்கு முன்பு அசாமில் குடி யிருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்குவது, அதற்கு பின்னர் வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க கூடாது என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அந்த ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சட்டமாக அமலுக்கு வரவில்லை. இந்த பிரச்சினை இப்போது வரை நாடாளுமன்ற இணைக்குழுவின் ஆய்வில் உள்ளது. அசாமில் நடந்த கடந்த சட்டசபை தேர்த லில் பாரதிய ஜனதா அசாம் கனபரிஷத் உள்ளிட்ட கட்சி களுடன் கூட்டணி அமைத்து அப்போது அசாம் கனபரிஷத் ராஜீவ்காந்தி காலத்தில் போடப் பட்ட ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று வற்புறுத்தியது. அதற்கு பாரதிய ஜனதா சம்மதம் தெரிவித்து. அதையடுத்து தான் அவர்களுக்குள் கூட்டணி ஏற்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. இதனால் அசாம் கனபரிஷத் கட்சி கோபம் அடைந்துள்ளது. அதுல்போரா தலைமையிலான குழுவினர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத் தினார்கள்.

மேலும் இது சம்பந்தமாக அதுல் போரா கூறும்போது, மத்தி யில் உள்ள பாரதிய ஜனதா அரசு புதுவிதமான குடியுரிமை சட்டத்தை அமலுக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. இதன்படி அசாமில் புதிதாக குடியேறிய மற்ற மதத்தினரையும் பிற் காலத்தில் குடியேறியவர்களை யும், இந்திய மக்களாக கருதி குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்பட் டுள்ளது. இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்த முயற்சியை தொடர்ந்து பாரதிய ஜனதா கையில் எடுத்தால் நாங்கள் அவர்கள் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை. எனவே புதிய மசோதாவை அமலாக்க முயற்சித்தால் எங்களால் கூட் டணியில் நீடிக்க முடியாது என்று கூறினார்.

ஏற்கனவே பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம், சிவசேனா, மற் றும் சில சிறிய கட்சிகள் வெளி யேறி இருக்கின்றன. இப்போது அசாம் கனபரிஷத்தும் வெளி யேறப் போவதாக எச்சரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner