எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதிய உடை உடுத்தியதற்காக

தாழ்த்தப்பட்ட இளைஞர் தாக்குதல்

காந்திநகர், ஜூன் 16 மகாராஷ்டிர மாநிலத்தில் கிணற்றில் குளித்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தாக்கப்பட்டதைப் போல, குஜராத்தில் புத்தாடை அணிந்ததற்காகவும் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் பெச்ராஜி என்றஊரின் கடைவீதியில், மகேஷ் ரத்தோடு என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் நின்று கொண்டு இருந்துள்ளார். அவர் புத்தாடை அணிந்து இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த இளைஞர்கள், மகேஷிடம் புத்தாடையுடன் நிற்கிறாயே நீ என்ன ஜாதி? என்று கேட்டுள்ளனர். அதற்கு, மகேஷ் தன்னை தாழ்த்தப்பட்டவர் என்று கூறியுள்ளார். இதைக்கேட்ட உடனேயே ஆத்திரமடைந்த அவர்கள், மகேஷ்ரத்தோடை சரமாரியாக தாக்கியுள்ளனர். புதிய உடையெல்லாம் உடுத்து கிறாயே.. நீ எங்களைப்போல மாற நினைக்கிறாயா? என சொல்லிக் கொண்டே அவர்கள் தாக்கியுள்ளனர். ஒருவர் கத்தியாலும் குத்த வந்துள்ளார். அவர்களிடமிருந்து தப்பியதால் மகேஷ் ரத்தோடு உயிர் பிழைத்துள்ளார். பாஜக ஆளும், குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடப்பது தொடர் நிகழ்வாகி விட்டது. அண்மைக்காலமாக அது அதிகரித்து வருகிறது. வகாதி, பெச்ராஜி கிராம சம்பவங்கள் அதற்கு உதாரணங்களாகும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner