எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, ஜூன் 18- ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு செலவுத்தொகையை தருவ தற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர் பான வரைவு அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில், காப்பீட் டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக் கான செலவுத்தொகையை தரு வதற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க அரசு திட்டமிட்டிருப் பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சனிக்கிழமை கூறியதாவது: ஆயுஷ்மான் பாரத் மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனைகள் கோரும் செலவுத்தொகையை 15 நாள்களுக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்க வேண் டும். தவறினால், கொடுக்க வேண்டிய தொகைக்கு, வாரம் 1 சதவீதம் வட்டி என்ற அடிப் படையில் அபராதம் விதிக்கப் படும். அந்த அபராதத்தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் நேர டியாக மருத்துவமனைகளுக்கு கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஏழைக் குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த திட் டத்தை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத் திட்டத்தை செயல்படுத்துவ தற்கு 20 மாநில அரசுகள் ஒப்பு தல் அளித்துவிட்டன. டில்லி, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங் கம் ஆகிய 4 மாநில அரசுகள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. அந்த மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner