எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஆளுநர்களைக் கொண்டு பலவீனப்படுத்தும் மோடி அரசு

புதுடில்லி, ஜூன் 19- அரசமைப்புச் சட்டத்தின் முது கெலும்பாக இருக்கும் கூட்டாட்சித் தத்துவத்தை, மத்திய  மாநில அரசுகளின் உறவுகளை மத்திய அரசு அழித்தொழித்திட மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

தலைநகர் புதுடில்லியில் மக்களால் ஜனநாயகப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டில்லி ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் வகையில் துணை ஆளுநரைக் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டித்து பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் முன்பு ஞாயிறு அன்று மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் மார்க்சிஸ்ட்கம் யூனிஸ்ட் கட்சியும் கலந்து கொண்டது. பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் டில்லி மாநிலத் தலைவர்களும் பேரணியில் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

மத்திய அரசு பல்வேறு மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் ஜனநாயகப் பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அல்லாத அரசாங்கங்களைப் பலவீனப்படுத்திட நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறது. தலைநகர் டில்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச மாநில அரசுகள் மீதும் இப்போது இவ்வாறுநடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. கருநாடகாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அப்படியே கபளீகரம் செய்வதற்காக அங்குள்ள ஆளுநரின் அலுவலகத்தைப் பயன்படுத்தியது.

ஆயினும் அதுமுறியடிக்கப்பட்டது. கோவா, மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலங்களில் தேர்தல்களில் தோல்வியடைந்தபின்னரும் அம்மாநிலங்களில் பாஜக அரசாங்கங்கள் அமைப்பதற்கு அங்குள்ள ஆளுநர்களைப் பயன் படுத்திக் கொண்டது. பீகாரிலும் பாஜக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கொல்லைப்புற வழியில் அரசாங்கத்திற்குள் நுழைந்திட ஆளுநரின் அலுவலகத்தைத் தவறாகப் பயன்படுத்த முயற்சி செய்தது.

இத்தகைய இழிமுயற்சிகள் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு முதுகெலும்பாக விளங்கிடும் மத்திய  மாநிலஅரசுகளின் உறவுகளை அழித்தொழித்திட பாஜக மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது அனுமதிக்கப்படக் கூடாது.

இவ்வாறு மத்திய அரசு எதேச்சதிகார மான முறையில் அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களைதவறாகப் பயன்படுத்துவதற்கு முதலில் பலியானது கம்யூனிஸ்ட்டுகள்தான். 1957இல் கேரளாவில் மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயகப்பூர்வமாக அமைந்த கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை அன்றைய மத்திய அரசு கலைத்தது. பின்னர் இதேபோன்று பலமுறை கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் நடைபெற்றன. இவ்வாறு சீத்தாராம் யெச்சூரிகூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner