எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடக முதல்வர் உறுதி

டில்லி, ஜூன் 21 கவுரி லங்கேஷ் கொலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சிறீராம் சேனாவின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருநாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையாளிக்கும், இந்து அமைப்பான சிறீராம் சேனாவுக்கும் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதை ஒட்டி சிறீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக் ஒரு கூட்டத்தில், "கவுரி லங்கேஷ் கொலைக்கும்" சிறீராம் சேனாவுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.  இந்து அமைப்புக்கள் அவரைக் கொலை செய்ய திட்டமிட்ட தாக கூறுவது தவறு. காங்கிரசு ஆட்சியில் மகாராட்டிராவிலும், கர்நாடகத்திலும் தலா இரு கொலைகள் நடந்தன. ஆனால் காங்கிரசு ஆட்சியை யாரும் குறை கூறவில்லை.

தற்போது பிரதமர் மோடி இது குறித்து ஒன்றும் சொல்ல வில்லை என பலரும் கூறு கின்றனர். இதற்கு மோடி என்ன சொல்வார்? கருநாடகா வில் ஒவ்வொரு முறை ஒரு நாய் இறக்கும் போதும் பிர தமர் கருத்து தெரிவிக்க வேண் டுமா?" என கேள்வி கேட்டார்.  இது நாடெங்கும் சர்ச்சையை உண்டாக்கியது.  பிரமோத் முத்தலிக் அதன் பிறகு தாம் யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கேவலமாக பேசவில்லை என விளக்கம் அளித்தார்.

பிரமோத் இவ்வாறு பேசி யதற்கு பல அரசியல் தலை வர்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  ஜிக்னேஷ் மேவானி, நடிகர் பிரகாஷ் ராஜ்,  காங்கிரசு தலைவர்களில் பலர் தங்களின் டிவிட்டர் பக் கத்தில் பிரமோத் பேசியதற்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

டில்லியில் இருந்த கருநாடக முதல்வர் குமாரசாமியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்விகள் கேட்டனர்.   அப் போது, "பிரமோத் முத்தலிக்காக இருந்தாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி அனைவரும் அரசுக்கு ஒன்று தான். சட்டத்துக்கு விரோத மாகவோ, சட்டவிரோத நடவ டிக்கைகளை ஆதரித்தோ பேசி னால் அவர் விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்படுவார், அதே போல் பிரமோத் முத்தலிக் கொலைகாரர்களுக்கு ஆதரவாக பேசியிருப்பது விசாரணையில் தெரியவந்தால் அவர்மீது கைது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner