எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ரொக்கப் பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை

ஆய்வில் தகவல்

புதுடில்லி, ஜூன் 21- பிரதமர் நரேந்திர மோடியின் நான்காண்டு கால ஆட்சி யில், நாட்டில் வேலைவாய்ப்பு, உற் பத்தி, ஏற்றுமதிஆகியவற்றில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. பொருளாதாரத்தை மேம்படுத்தும் நட வடிக்கைகள் என்று மோடி அரசால் கொண்டுவரப்பட்ட பண மதிப்புநீக்கம், ஜிஎஸ்டி எதுவும் பயனளிக்கவில்லை. நாட்டில் எந்த முன்னேற்றத்தையும் அது கொண்டுவரவில்லை என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பண மதிப்பு நீக்கம் ஒரு தோல்விய டைந்த திட்டம் என்பதை உறுதிப்படுத் தியுள்ளன.

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம்தேதி முன்னிரவில் 1000 ரூபாய் மற்றும்500 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல் லாது என்று பிரதமர் நரேந்திர மோடி திடுதிப்பென்று அறிவித்தார். நாட்டில் கறுப்புப் பணத்தையும், தீவிரவாதிகளி டம் கள்ள நோட்டுப் புழக் கத்தையும், ஊழலையும் ஒழிக்கவே இந்த நட வடிக்கை என்று கூறினார்.ஆனால், ஓராண்டு கடந்தும் மோடிசொன்ன கறுப்புப் பணம், கள்ளப்பணம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஊழலும் தடுக்கப்பட்டதாக இல்லை. சொல்லப் போனால், கறுப்புப் பணம் என்று கரு தப்பட்ட அத்தனை பணமும், வங்கிக்கு வந்து வெள்ளையாகிப் போனது. பய மின்றிஅந்தப் பணம் புழங்கிக் கொண்டி ருக்கிறது. தீவிரவாதமும் தடுக்கப்பட வில்லை.

இதையடுத்து பணமதிப்பு நீக்கத் திட்டம் தோல்வியா? என்று அப்போதே கேள்விகள் எழுந்தன. ஆனால், அதற்கு நேரடியாக பதில்சொல்லாத பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட் லியும், ரொக்கப் பரிவர்த்தனைகளைக் குறைத்து, டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்தவே பணமதிப்பு நீக்கம் செய் தோம் என்று புதிய கதை ஒன்றை அவிழ்த்து விட்டனர். டிஜிட்டல் பரி வர்த்தனை மேற்கொள்வதற்கு பீம் ஆப் என்று ஒரு செயலியையும் அறிமுகப் படுத்தி, குறிப்பிட்ட அளவிலான தொகைக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோருக்கு குலுக்கலில் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை காரண மும், ஒரு ஜோடிக்கப்பட்ட கதைதான் என்பதை தற்போதைய புள்ளிவிவர உண் மைகள் அம்பலப்படுத்தி இருக்கின்றன.

ரொக்கப் பரிவர்த்தனையில்

மாற்றம் இல்லை

ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2012-ஆம் ஆண்டிலிருந்து பணமதிப்புநீக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலம் வரையிலும்-, பின்னர் அதிலிருந்து 2018 மே மாதம் வரையிலுமான நாட்டின் ரொக்கப் புழக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டு, அதன் முடிவுகளை மிண்ட் ஊடகம் அளித்துள்ளது. அதில், பண மதிப்பு நீக்கத்திற்குமுன்பும், மதிப்பு நீக்கத்திற்கு பின்புமாக ரொக்கப் பரிவர்த்தனையில் எந்தமாற்றமும் இல்லை என்பது அம்பலமாகி இருக் கிறது. பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 310 மில்லியன் (31 கோடி) மொபைல் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட் டிருந்த நிலையில், மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை 268.79 மில்லியனாக (27 கோடி) குறைந்துள்ளது; அதேபோல, பரிவர்த்தனைகளின் மதிப்பும் ரூ. 13 ஆயிரத்து 100 கோடியிலிருந்து ரூ. 10 ஆயிரம் கோடியாகக் குறைந்துள்ளது; என்று மிண்ட் ஊடகம் கூறியுள்ளது. எனவே, பணமதிப்பு நீக்கம் தொடர்பான டிஜிட்டல் பரிவர்த்தனை சமாளிப்பும் மோடியை கவிழ்த்து விட்டது.

கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதியும்

குறைந்தது

இந்தியாவின் வர்த்தகத்தை அதிகரிக் கவே, உலக நாடுகளுடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வரு வதாக பிரதமர் நரேந்திர மோடி அண் மையில் கூறியிருந்தார். ஆனால், பிரத மரின் பேச்சுக்கும் உண்மைக்கும் தொடர் பில்லாமல் இருப்பதை காங்கிரசு மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதிய மைச்சருமான ப. சிதம்பரம் ஆதாரங்களு டன் தெளிவுபடுத்தி உள்ளார். உலக நாடுகளுடனான இந்தியாவின் வர்த்த கம் இறங்குமுகமாகவே இருக்கின்றது என்று கூறியிருக்கும் ப.சிதம்பரம், மோடியின் கடந்த நான்கு வருட ஆட்சி யில் ஏற்றுமதி மதிப்பு 315 பில்லியன் டாலர்களில் இருந்து 303 டாலர்களாக குறைந்து விட்டதையும், அதேநேரம் இறக்குமதி மதிப்பு 450 பில்லியன் டாலர்களில் இருந்து 465 பில்லியன் டாலர்களாக அதிகரித்து இருப்பதையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

மேலும், உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஏற்றுமதி சாத்தியப்படுவ தில்லை; எந்தவொரு நாடும்வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் உற்பத் தித் திறனை அதிகரிக்க முடியாது என்று கூறியிருக்கும் ப.சிதம்பரம், இதுபோன்ற பிரச்சினைகளின் விளைவாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 2015--16இல் 8.2 சதவிகிதத்தில் இருந்தது 2017---18இல் 6.7 சதவிகிதமாக குறைந்தது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். உலக பொருளாதாரம் பற்றி பேசும் போது நரேந்திர மோடி முன் யோசனை யுடன் பேச வேண்டும் என்றும் ப.சிதம் பரம் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner