எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 22 இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரி காணாமல் போன வழக்கை சிபிஅய் விசார ணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

இதுதொடர்பாக, காணா மல்போன உளவுப் பிரிவு அதிகாரியின் மனைவி யமுனா ஞானபிரகாசம் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனு விவரம்: டில்லியில் இந்திய ராணு வத்தின் உளவுப் பிரிவு அதிகாரி யாக எனது கணவர் ஞான பிரகாசம் பணியாற்றினார். நாங்கள் கடந்த 2010 -ஆம் ஆண்டு திண்டிவனம் அருகே நடந்த நிகழ்ச்சிக்காகவும், சென்னையில் நடந்த உறவின ரின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொள்வதற்காக டில்லியிலி ருந்து வந்திருந்தோம்.

அதே ஆண்டு ஜூன் மாதம் ஊட்டியில் படிக்கும் எங்களது மகனை அழைத்துச் செல்ல வந்த எனது கணவர், என்னை செல்லிடப்பேசியில் அழைத்து அவசரமாக திருப்பதி செல்வ தால், எனது சகோதரரை அனுப்பி மகனை அழைத்து வரக் கூறினார். பின்னர் அந்த செல்லிடப்பேசியில் நான் தொடர்பு கொண்டபோது எதிர் முனையில் பேசியவர், எனது கணவர் முக்கியமான ஆலோ சனைக் கூட்டத்தில் இருப்பதாக வும், இரண்டு மணி நேரம் கழித்துக் கூப்பிடுமாறும் கூறி னார். ஆனால், எனது கணவ ரின் செல்லிடப்பேசி எண்ணை அதன் பின்னர் தொடர்பு கொள்ள முடியவில்லை.  எனது கணவர் காணாமல் போனது குறித்து சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தேன். காவல்துறையினரால் எனது கணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். வழக்கை விசா ரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிசிஅய்டிக்கு மாற்றி உத்தரவிட்டது. இது குறித்த விசாரித்த சிபிசிஅய்டி காவல்துறையினரும் காணா மல் போன எனது கணவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்து செங்கல்பட்டு நீதிமன் றத்தில் அறிக்கை தாக்கல் செய் துள்ளனர். எனவே, காணாமல் போன எனது கணவரின் வழக்கை சிபிஅய் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப் பித்த உத்தரவு:

காவல்துறையினர் ஒரு வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்தால், அந்த அறிக்கை தாக்கல் செய் யப்பட்ட நீதிமன்றத்துக்கு சென்று, எதிர்ப்பு மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற உயர் நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், இந்த வழக்கில் காணாமல் போனவர் இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவில் முக்கியப் பதவி வகித்தவர். எனவே, இந்த வழக்கை சிபிஅய் அதிகாரிகளிடம் ஒப் படைப்பதுதான் சரியாக இருக் கும். எனவே, மனுதாரரின் கணவர் காணாமல் போன வழக்கை சிபிஅய் கண்காணிப் பாளரிடம் ஒப்படைக்க சிபிசிஅய்டி கண்காணிப்பாளருக்கு உத்தர விடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner