எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இசுலாமியரை ஏன் திருமணம் முடித்தாய்?

என்று கூறி பாஸ்போர்ட்டை முடக்கிய அதிகாரி

டில்லி, ஜூன் 23-  நொய்டாவைச் சேர்ந்த ரன்வீர் சேத் என்ற பெண் 2017-ஆம் ஆண்டு முகமது சிக்கித் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணத்திற்கு இருவீட்டாரும் மனமுவந்து சம்மதம் தெரிவித்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, இரு வருமே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி வெளிநாடு செல்லவேண்டி இருப்பதால் ரன்வீர் சேத் பாஸ்போர்ட் டிற்கு விண்ணப்பிதித்துள்ளார். அவரது பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பார்த்த பாஸ்போர்ட் அதிகாரி நீ இந்து எப்படி இசுலாமியர் ஒருவரை திருமணம் செய்யலாம் என்று கேட்டுள்ளார். அதுமட்டு மல்லாமல் "உனது கணவரை இந்துவாக மாற்றி, அவருக்கு இந்து பெயர் வைத்து அதை அரசிதழில் வெளியிட்டால் மட்டுமே உனக்கு பாஸ் போர்ட் தருவோம்" என்று கூறியுள்ளார். அந்த இசுலாமியர் உன்னை ஏமாற்றி லவ்ஜிகாத் முறையில் திருமணம் செய்து கொண்டாரா? உன்னையும் இசுலாம் மதம் மாற நிர்பந்தித்தாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உனது கணவர் இந்துவாக மாறும் வரை அவரது பாஸ்போர்ட்டை யும் முடக்கி வைப்போம் என்று கூறி யது மட்டுமல்லாமல், முகமது சித்திக் கின் பாஸ்போர்ட்டையும் பாஸ்போர்ட் அதிகாரிகள் முடக்கி வைத்தனர். இதனை அடுத்து அவர் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து சமூக ஆர்வலர் ஒருவரிடம் முறையிட் டுள்ளார். மேலும் சுஸ்மா சுவராஜுக்கும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து தகவல் தெரிவித்தார்.  அதில் உண்மை யான ஆவணங்கள் இருந்த போதும், வேறு ஒரு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் பாஸ் போர்ட் அதிகாரிகள் அநீதிகள் இழைத் துள்ளனர். எனது கணவர் இசுலாமியர் என்பதால் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட வில்லை. எனது வாழ்நாளில் இது போன்ற ஒரு அவமானத்தை நான் சந்தித்ததில்லை. நான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது குடும்ப விஷயம். இதற்காக எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட் டிருந்தார்.

பாஸ்போர்ட் அதிகாரி மாற்றம்

இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானதும் பிரச்சினை பெரிதானது.  பலர் இது குறித்து சுஸ்மா சுவராஜிடம் பதில் கூறுமாறு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதனை அடுத்து விசா ரணைக்கு உத்தரவிட்ட வெளியுறவுத் துறை அமைச்சரகம் அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. இதனை அடுத்து அந்த அதிகாரியை நொய்டா வில் இருந்து உத்தரப்பிரதேசம் கோரக் பூர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மாற்றம் அளித்து உத்தரவிட்டது,

அதிகரித்து வரும் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள்

இந்தியாவில் சுதந்திரத்திற்குப்  பிறகு கடந்த 3 ஆண்டுகளாக சிறுபான் மையினருக்கு எதிரான அபாய கரமான செயல்பாடுகள் அதிகரித்து விட்டன, மாட்டை கடத்தினார்கள் என்று இசு லாமியர்களை அடித்துக் கொலை செய்வது, இசுலாமிய கிறித்தவ வணிக நிறுவனங்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இது இந்து அமைப்பினரின் செயல் பாடுகள் என்று கூறிக்கொண்டு இருக் கும் நிலையில் படித்தவர்கள் மத்தி யிலும் இந்து மதவெறி அதிகரித்து அது சிறுபான்மையினருக்கு எதிராகத் திரும் பியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner