எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீநகர், ஜூன் 23- காஷ்மீர் மாநிலத்தில் ரைசிங் காஷ்மீர் ஆங்கில நாளிதழ், உருது நாளிதழ் புலாந்த் காஷ்மீர், காஷ்மீரி மொழி நாளிதழ் சங்கர்மால் மற்றும் உருது வார இதழ் காஷ்மீர் பார்ச்சம் ஆகிய ஏடுகளை நிறுவி நடத்தி வந்தவர் டாக்டர் சையத் சுஜாத் புகாரி (வயது 50)

சிறீநகரில் கடந்த 14.6.2018 அன்று மாலை ரைசிங் காஷ் மீர் பத்திரிகையின் நிறுவனர் சுஜாத் புகாரி அவர் அலுவல கத்தில் பணியாற்றிக் கொண் டிருந்தபோது கொல்லப்பட் டார். அவரைக்கொல்வதற்கு முன்பாக கொலையாளிகள் அவருடைய காவலர்கள் இருவரை சுட்டுக்கொன்றனர்.

இப்படுகொலைகள் நாடு முழுவதும் மட்டுமல்லாமல் பன்னாட்டளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி யது.

சுஜாத் புகாரி நிறுவிய ரைசிங் காஷ்மீர் ஆங்கில நாளிதழ், உருது நாளிதழ் புலாந்த் காஷ்மீர், காஷ்மீரி மொழி நாளிதழ் சங்கர்மால் மற்றும் உருது வார இதழ் காஷ்மீர் பார்ச்சம் ஆகிய ஏடு களின் பணியாளர்கள், பத்திரி கையாளர்கள், புகைப்பட செய்தியாளர்கள் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலரும் ஒன்றிணைந்து பத்திரிகைளர் சுஜாத் புகாரியின் படுகொலை யைக் கண்டித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.

படுகொலைக் கண்டன வாசகங்களைக் கொண்ட பதாகைகள் ஏந்தியும், வாயில் பிளாஸ்திரி ஒட்டியும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 14ஆம் நாளன்று பத்திரிகையா ளர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதைக் கண் டித்து காஷ்மீர் மாநிலத்தில் முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு, நேற்றுமுன்தினம் (21.6.2018) முழு அடைப்பு நடைபெற் றது. அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட மாநி லமே முழு அடைப்பால் முடங்கியது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner