எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும்:

மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்

டில்லி,ஜூன் 23: நாடாளுமன்றத்தில் அமளி செய்வதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை எம்பிக்கள் உணர வேண்டும் என்று மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். புதுடில்லியில் விஷன் இந்தியா சார்பில் நடந்த கருத்தரங்கில் மக்களவை மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:

அனைத்து எம்பிக்களுக்கும் மக்களவையில் எப்படி நடக்க வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைப்புத்தகம் வழங் கப்பட்டுள்ளது. அதை அவர்கள் பின்பற்ற வேண்டும். இதை யெல்லாம் மீறி அவையில் தொடர்ந்து அமளி நடப்பதும், அதனால் அவை ஒத்திவைக்கப்பட்டு வருவதும் எனக்கு மிகவும் வேதனையையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது. நாடாளுமன்றம் சுமூகமாக நடைபெற அனைத்து கட்சி தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டும். நாடாளுமன்றம் கலந்து ஆலோசிக்கவும், விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் உள்ள இடம். அனைத்து எம்பிக்களும் இதை பின்பற்ற வேண்டும்.

ஆனால் அவை நடுவே வந்து எம்பிகள் அமளியில் ஈடுபடு கிறார்கள். ஏனெனில் அனைத்து எம்பிக்களும் அவர்களது கட்சிக்கொள்கையைத்தான் பின்பற்றுவார்கள். அந்த முடிவு அவர்களது கட்சி தலைவர்களால்தான் எடுக்கப்படுகிறது. இருப்பினும் மக்கள் கவனித்து வருகிறார்கள் என்பதை எம்பிக்கள் உணர வேண்டும். இல்லையென்றால் 5 ஆண்டு பதவிக்காலம் முடிந்து தேர்தல் வரும் போது அவர்கள் உரிய முடிவை எடுப்பார்கள். நல்ல பேச்சு மற்றும் விவாதம் இப்போது நாடாளுமன்றத்தில் நடப்பதில்லை. மாறாக அவையை முடக்குவதில்தான் எம்பிக்கள் கவனம் செலுத்து கிறார்கள்.  பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்ட மன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தாழ்த்தப்பட்ட எம்எல்ஏவை திருடன் என்று இழிவுபடுத்திய உ.பி. பாஜக தலைவர்!

வாரணாசி, ஜூன் 23- --தாழ்த்தப்பட்ட என்பதால், தன்னைப் பாஜகவினர் புறக்கணிப்பதாகவும் திருடன் என்று அழைத்து இழிவுபடுத்துவதாகவும் சுகல் தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சந்தவுலி மாவட்டத்தில், கடந்த செவ்வாயன்று அரசு விழா ஒன்று நடைபெற்றது. துணை முதல்வர் தினேஷ் சர்மா, பாஜக தலைவர் மகரேந்திர நாத் பாண்டே ஆகியோர் பங்கேற்றனர். விழாவையொட்டி கல்வெட்டு ஒன்றும் திறக்கப்பட்டது. ஆனால், அந்த கல் வெட்டில் சம்பந்தப்பட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப் பினரான கைலாஷ் சோன்கர் பெயர்இடம்பெறவில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர், பாஜகவின் கூட் டணிக் கட்சியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியைச் சேர்ந் தவர். இது ஒருபுறமிருக்க, கைலாஷ் சோன்கரின் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்பதற்கு, மகரேந்திரநாத் பாண்டே விளக்கம் ஒன்றைமேடையிலேயே அளித்துள் ளார். அதில், இந்த தொகுதியின் எம்எல்ஏ கைலாஷ்சோன்கர், திருடனாக மாறிவிட்டார்; அதனாலேயே அவரின் பெயரைக் கல் வெட்டில் சேர்க்கவில்லை என்று கூறியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி உள்ளது.

தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், பாஜக தலைவர்கள் தன்னைத் திட்டமிட்டு ஒதுக்குவதாகவும் திருடன் என்று மிகமோசமாக இழிவுபடுத்துகிறார்கள் என்றும் கைலாஷ் சோன்கர் தெரிவித்துள்ளார். பாண்டே இந்தவிமர்சனத்தின் மூலம் தன் னையும் தனது தொகுதி மக்களையும் இழிவுபடுத்தி இருக்கிறார்; இதற்காக பாண்டே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கைலாஷ் சோன்கர் கூறியுள்ளார்.

ரேசன் மானியத்தை பணமாக அளிப்பதைவிட பொருள்களை வழங்குங்கள்:

ஜார்க்கண்ட் மக்கள் கோரிக்கை

டில்லி, ஜூன் 23- -ரேசன் மானியத்தை பணமாக அளிப்பதைவிட, பொருட்களாகவே வழங்கி விடுங்கள் என்று ஜார்க்கண்ட் மாநில மக்கள் கோரிக்கை விடுக்கத் துவங்கியுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரேசனில் பொருட்கள்தான் வழங்கப்பட்டு வந்தன. தமிழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு, ஒருகிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கப் பட்டது. ஆனால், திடீரென ரேசனில் பொருட்கள் வழங்குவது நிறுத் தப்பட்டு, அதற்குப் பதிலாக, அந்தப் பொருட்களின் சந்தை விலை மதிப்பீடு அடிப்படையில் பணம் வழங்கப்பட்டது. தலா ஒரு கிலோ அரிசிக்கு ரூ. 31 என்ற அடிப்படையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தப் பட்டு வந்தது. மானியத்தை பணமாக வழங்கும் இந்தத் திட்டம் முத லில், புதுச்சேரி, தாத்ரா மற்றும்நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களில்தான் அமல்படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால், அங்குள்ள ஆட்சியாளர்கள் மறுத்து விட்டதால், பாஜக ஆளும் ஜார்க்கண்டிலேயே இந்த திட்டம் அமல் படுத்தப்பட்டது.

இந்நிலையில், மானியத்தை பணமாக வழங்குவதை 96.9 சதவிகித ஜார்க்கண்ட் மக்கள் விரும்பவில்லை என்பது தற்போது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக,நாக்ரி பகுதியில் வசிப்பவர்களில் பெரும் பாலானவர்கள் இம் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  அரசு மானியமாக வழங்கும் பணம் தங்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று 83 சதவிகிதம் பேரும் 13 சதவிகிதம் பேர் தங்களுக்கு மானியமே கிடைப்பதில்லை என்றும் கூறியுள்ளனர். ரேசனில், பணத்திற்குப் பதில் பொருட் கள்தான் தங்களுக்கு வேண்டும் என்றும் பெரும்பாலானோர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner