எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர்எஸ்எஸ்-சின் அழுக்கு தந்திரத்தில் என் தந்தை சிக்கி விட்டார்: பிரணாப் முகர்ஜி மகள்

ஆர்எஸ்எஸ் அழுக்கு தந்திரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் நடத்தும் விழாவில் எனது தந்தையைப் பங்கேற்கச் செய்திருக் கிறார்கள் என்று பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி விமர்சித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் தனது தொண்டர்களுக்கு அளிக்கும் பயிற்சியின் நிறைவு விழாவை, சங்க சிக்ஷா வர்கா என்ற பெயரில் நடத்துகிறது. அந்த வகையில், இந்தாண்டு நடை பெற்ற விழாவில், காங்கிரசு மூத்த தலை வரும், குடியரசு முன்னாள் தலைவருமான பிரணாப் முகர்ஜியை சிறப்பாளராக அழைத்து பங்கேற்க வைத்தது. காங்கிரசு கட்சியினர் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும், பிரணாப் முகர்ஜி எவ்வித சங்கடமும் இன்றி அந்த விழாவில் கலந்து கொண்டார்.

இதனிடையே, பிரணாப் முகர்ஜி, ஆர் எஸ்எஸ் அமைப்பிலேயே இணைந்து விட்டார் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதற்கு பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி கண்டனம் தெரிவித் துள்ளார். பாஜக-வின் கண்ணியமற்ற, அழுக் கான தந்திரம் இது என்று கடுமையாக சாடி யுள்ள சர்மிஷ்தா, ஆர்எஸ்எஸ் அமைப்பில் பிரணாப் இணைந்து விட்டதாக கூறும் வதந்திகளை புறந்தள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும், ஆர்எஸ்எஸ் விழாவிற்கு பங்கேற்கும் தனது தந்தையையும் சர்மிஷ்தா விமர்சித்தார். பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்பது பாஜக-விற்கும், ஆர்.எஸ்.எஸ்.-க்கும் தவறான தகவல்களைப் பரப்ப நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும், ஆர்எஸ்எஸ் விழாவில் பிரணாப் முகர்ஜி என்ன பேசினாலும், அந்தப் பேச்சு மறந்து போகும்; அவர் பங்கேற்ற காட்சிகளும் மறந்துபோகும்; ஆனால், பிரணாப் பங் கேற்பு குறித்து, பாஜக-வும் ஆர்.எஸ். எஸ்.சும் வெளியிடும் பொய்யான செய்திகள் காலத்திற்கும் நீடித்து இருக்கும் என்று சர்மிஷ்தா கூறியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner