எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உபி.யில் அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞரின் சகோதரர் கண்ணீர்

பில்குவா, ஜூன் 25 கால்நடை  விற்பனையாளரான என் சகோதரரை பாஜக குண்டர்கள் அடித்து, உதைத்து, செத்த மிருகத்தை இழுத்து வந்ததைப் போல் இழுத்து வந்தனர் என்று உபியில் ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞரின் சகோதரர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டம், பில்குவா பகுதியில் உள்ள பஜேகுரா குர்து கிராமத்துக்குத் காசிம் (வயது45), அவரின் நண்பர்சமயுதீன் ஆகியோர் திங்கள்கிழமை கால்நடைகள் வாங்கச் சென்றனர். அப்போது காசிம் மையும், அவரின்நண்பரையும் பார்த்த அந்தக் கிராமத்தில் உள்ள சிலர் பசுமாட்டை வாங்கிக் கொல்வதற்கு வந்திருக்கிறார்கள் எனத் தவறாக நினைத்து அடித்து, உதைத்து, சாலையில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதை ஒருதரப்பினர் புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். இதைப் பார்த்த காவல்துறையினர் அந்த கும்பலை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். இந்தச் சம்பவம் குறித்த புகைப்படம் வெளியானவுடன் உபி காவல்துறையினர் மன்னிப்பு கோரினார்கள். இந்தச் சம்பவத்தில் தாக்கப் பட்ட காசிம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார், மற்றொருவர் சமயுதீன்தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து காசிமின் சகோதரர் நேற்று முகம்மது நதீம் டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். இந்தச் சந்திப்பை மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்(ஏபிசிஆர்) ஏற்பாடு செய்திருந்தது.

அப்போது அவர் கூறியதாவது:

ஹபூரில் உள்ள பஜேகுரா குர்து கிராம மக்கள் நினைப்பதுபோல் என் சகோதரரும் அவரின் நண்பரும் இறைச்சிக்கடைக் காரர்கள் இல்லை. அவர்கள் கால்நடை களை விலைக்கு வாங்கி சந்தையில் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். ஆனால், இவர்களைப் பசு மாட்டை கொலை செய்பவர்கள் என நினைத்த பாஜக குண்டர்கள், கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

செத்த மிருகத்தைச் சாலையில் இழுத்து வருவதைப் போல் என் சகோதரரை இழுத்து வந்தனர். நாங்கள்முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், என் சகோதரர் தரம்தாழ்ந்து நடத்தப்பட்டார். தண்ணீர்தாகத்தாலும், அடிபட்ட காயத்தாலும் என் சகோதரர் அழும்போது, யாரும் அவருக்கு உதவவில்லை. அந்த பாஜக குண்டர்கள் அவருக்குத் தண்ணீர் கொடுக்காமல், அவர் முஸ்லிம் என்று இறைச்சிக்கடைக்காரர்என்று கூறினார்கள். போலீஸார் கண்முன்னே செத்தமிருகத்தை போல் இழுத்துவரப்பட்டார்.

காவல்துறையினர் கண்முன்னே காசிம்மை கும்பல் அடித்து இழுத்து வந்த காட்சி நான்கு நாட்களுக்கு முன் வீட்டை விட்டுபுறப்படும் போது, என் சகோதரர், கால்நடைகள்வாங்கப்போகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். ஆனால், சென்ற வர்தான் இன்றுவரைவீடுதிரும்பவில்லை, இனிமேல் திரும்பிவரப்போவதும் இல்லை. பிணமாகத்தான் வீட்டுக்கு அழைத்து வந்தோம்.என் சகோதரரை ஒருகும்பல் அடித்து விட்டார்கள், காவல் நிலையம் வாருங்கள் என்று காவல்துறையினர் எனக்குஅழைப்புச் செய்தபோதுதான் எனக்கு விஷயம் தெரிந்தது. நான் காவல் நிலையம் சென்றபோது, என்சகோதரரை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்றதாகக் கூறினார்கள். ஆனால் மருத்துவமனைக்குச் சென்றால், உயிரிழந்து பிணமாகக் கிடத்தப் பட்டு இருந்தார்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அந்தக் கும்பலால் தாக்கப்பட்ட மற் றொருவரான சமயுதீன் குறித்து அவரின் சகோதரர் முகம்மதுமெகருதீன் கூறுகை யில், என் சகோதரரை கும்பல் தாக்கி விட்டார்கள் என்று அறிந்து காவல் நிலையம் சென்றால் 6 மணிநேரம் எங்களைக் குழப்பிவிட்டார்கள். என் சகோதரரை என்னால் பார்க்க முடிய வில்லை. ஆனால், கடைசியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்த என் சகோதரரைச்சந்தித்தேன். ஆனால், எங்களுக்குத் தெரியாமல் என் சகோதரரிடம் இருந்த கைவிரல் ரேகையை காவல்துறையினர் பெற்றுச் சென்று விட்டனர். எதற்காக எனத் தெரியவில்லை எனத் தெரித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner