பெங்களூரு, ஜூன் 26 கவுரி லங்கேஷ் கொலையாளி பரசுராமிற்கு பெங்களூரு நீதிமன்றம் 2 நாள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு ஆர்.ஆர்நகரைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் கவுரிலங்கேஷ் கடந்தஆண்டு செப்.5ஆம்தேதிதுப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட் டார். இந்த கொலை தெடர்பாக எஸ்.அய்.டி.அதிகாரிகள்விசா ரணை நடத்தி, கே.டி நவீன், சுஜீத் குமார், பரசுராம் வாக் மோரோ ஆகிய 6 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். ஒவ்வொருவரிடம் நடத்திய விசாரணையில் பரசுராம் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது நான்தான் என்று கூறினார். விசாரணையில் அவர் கொடுத்த தகவல் அனைத்தும் வாக்குமூலமாக பதிவு செய் யப்பட்ட நிலையில் நேற்று மாலையுடன் எஸ்.அய்.டி காவல் முடிந்தது. இதையடுத்து நேற்று மாலை எஸ்.அய்.டி அதிகாரிகள் பரசுராமை பெங்களூரு 3வது ஏ.சி.எம்.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி பரசுராமை 2 நாள் நீதி மன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அழைத்துச் சென்று தண்டணை கைதிகளுக்கான அறையில் அடைத்தனர்.